عَنْ عَبْدِ اللهِ بنِ مَسعُودٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«عَلَيْكُمْ بِالصِّدْقِ، فَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَمَا يَزَالُ الرَّجُلُ يَصْدُقُ وَيَتَحَرَّى الصِّدْقَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ صِدِّيقًا، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ، فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَمَا يَزَالُ الرَّجُلُ يَكْذِبُ وَيَتَحَرَّى الْكَذِبَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ كَذَّابًا».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 2607]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
'நீங்கள் உண்மையைக் கடைப்பிடியுங்கள். ஏனென்றால் நிச்சயமாக உண்மை நன்மைக்கு வழி காட்டும். மேலும் நிச்சயமாக நன்மை சுவர்க்கத்திற்கு வழிகாட்டும் . மேலும் மனிதன் உண்மை பேசிக் கொண்டும் உண்மையைத் தேடிக் கொண்டும் இருக்கும் போது அவன் அல்லாஹ்விடம் உண்மையாளன் என்று எழுதப்படுவான். நீங்கள் பொய் சொல்வதையிட்டு உங்களை எச்சரிக்கை செய்கிறேன். ஏனெனில் நிச்சயமாகப் பொய் தீமைக்கு வழிகாட்டும். மேலும் நிச்சயமாக தீமை நரகிற்கு வழிகாட்டும். எனவே மனிதன் பொய் பேசிக் கொண்டும் பொய்யைத் தேடிக் கொண்டும் இருக்கும் போது அல்லாஹ்விடம் அவன் பொய்யன் என்று எழுதப்படுவான்'
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 2607]
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உண்மை பேசுமாறு வலியுறுத்துகிறார்கள். அவ்வாறு உண்மை பேசுவதை கடைப்பிடிப்பதும் நிலையான நற்காரியங்களை செய்யவும் நற்செயல்களை தொடராக செய்யவும் வழிவகுப்பதோடு அவரை சுவர்கத்தின் பால் கொண்டு போய்சேர்க்கும். இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தொடராக இப்பண்பை கடைப்பிடிப்பவர் உண்மையாளர் என்ற பெயருக்கு தகுதிபெற்றவராக மாறி விடுகிறார். அரபு மொழியில் சித்தீக் என்பது மிகப்பெரும் உண்மையாளர் என்ற கருத்தைக் காட்டும் ஒரு சொல்லாகும். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பொய் மற்றும் வீணாண வார்த்தை பேசுவதை விட்டும் எச்சரிக்கை செய்தார்கள். ஏனெனில் இச்செயற்பாடானது மார்க்கத்தில் உறுதியாக இருப்பதை விட்டு தடம்புரள தூண்டுவதோடு தீமைகளையும் பாவங்களையும் குழப்பங்களை செய்யயவும் வழிவகுக்கும். பின் இவை நரகத்திற்கு கொண்டுபோய் சேர்த்துவிடும். ஒருவர் தொடர்ந்தும் அதிகமாக பொய் சொல்பவராக இருக்கும் பட்சத்தில் அவர் பொய்யர் என அல்லாஹ்விடத்தில் பதிவு செய்யப்படுகிறார்.