عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ:
كَانَ أَكْثَرُ دُعَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6389]
المزيــد ...
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மிகவும் அதிகமாக ஓதும்; பிரார்த்தனையாக ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா பித்துன்யாக ஹஸனதன் வபில்ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' காணப்பட்டது. (யா அல்லாஹ் எமது இரட்சகனே ! எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்; நலவைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பிலிருந்து எம்மை காப்பற்றுவாயாக!
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 6389]
நபி ஸல்லல்லாஹு அதிகமாக சொற்சுருக்கமும் பொருட்செறிவும் மிக்க துஆக்களை அதிகம் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். அவற்றுள் ஒரு துஆ பின்வருமாறு : ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா பித்துன்யாக ஹஸனதன் வபில்ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' காணப்பட்டது. (யா அல்லாஹ் எமது இரட்சகனே ! எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்; நலவைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பிலிருந்து எம்மை காப்பற்றுவாயாக! இங்கு குறிப்பிடப்பட்ட உலகின் நலனை என்பது விசாலமான இன்பத்தை தரவல்ல ஹலாலான வாழ்வாதரம்,நல்ல –ஸாலிஹான மனைவி -கண்குளிச்சி மிக்க பிள்ளைகள் -ஓய்வு- நல்ல அமல் -செயல்பாடு போன்ற அனுமதிக்கப்பட்டதும் விரும்பத்தக்கதுமான கோரிக்கைகளைக் உள்ளடக்கியுள்ளது.மறுமை நலன் என்பது கப்ரிலும் இறைசன்னிதானத்திலும் நரகிலும் கிடைக்கவிருக்கும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்ப் பெறுதல்,இறைபொறுத்தத்தைத் பெறல்,நித்தியமான பேரின்பத்தை அடைந்து கொள்ளுதல்,கருணையாளனாகிய அல்லாஹ்விடம நெருக்கத்தைப் பெறுதல் போன்றவற்றைக் குறிக்கும்.