+ -

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «ما قعد قوم مقعداً لم يذكروا الله، ولم يصلوا على النبي صلى الله عليه وسلم إلا كان عليهم حسرة يوم القيامة».
[صحيح] - [رواه الترمذي]
المزيــد ...

ஒரு கூட்டம் ஓரிடத்தில் அமர்ந்து அல்லாஹ்வை நினைவு கூறாமலும் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமலும் இருந்தால் கியாமத்நாளில் அவர்களுக்கு அது கைசேதமாக அமையும்.எனஅபூஹுரைரா ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள்
[ஸஹீஹானது-சரியானது] - [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

விளக்கம்

இந்த ஹதீஸானது அல்லாஹ்வையோ அவனது தூதரைப் பற்றியோ நினைவு கூறாது நபியவர்கள் மீது ஸலவாத் சொல்லாது ஒரிடத்தில் அமர்ந்து கலைந்து சென்ற கூட்டத்தின் இழப்பு மற்றும் துயர் பற்றி குறிப்பிடுகிறது. இவ்வாறான அமர்வுகள் யாவும் கியாமத் நாளில் பெரும் துயரமாக அமையும்.காரணம் யாதெனில் அவர்கள் இவ்வமர்வுகள் மூலம் எவ்விதப் பயனையும் அடைந்து கொள்ளவில்லை. இவ்வாரான அனுமதிக்கப்பட்ட அமர்வுகளின் நிலையே இவ்வாறிருக்கையில் புறம் பேசுவது போன்ற தடைசெய்யப்பட்ட அமர்வுகளாக இருந்தால் அதன் நிலை (குறித்து என்ன கூற முடியும்) மிகவும் ஆபத்தானதாக அமையும். எனவே அமர்வுகள், ஒன்று கூடல்கள் இறை சிந்தனை, நபியர்களின் மீது ஸலவாத் கூறல் போன்ற அம்சங்களால் நிரம்பிக் காணப்படுதல் வேண்டும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் ஸ்வாஹிலி Осомӣ الأمهرية الهولندية الغوجاراتية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு