عَنْ عَلِيٍّ رضي الله عنه:
أَنَّ فَاطِمَةَ رَضيَ اللهُ عنْها أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشْكُو إِلَيْهِ مَا تَلْقَى فِي يَدِهَا مِنَ الرَّحَى، وَبَلَغَهَا أَنَّهُ جَاءَهُ رَقِيقٌ، فَلَمْ تُصَادِفْهُ، فَذَكَرَتْ ذَلِكَ لِعَائِشَةَ، فَلَمَّا جَاءَ أَخْبَرَتْهُ عَائِشَةُ، قَالَ: فَجَاءَنَا وَقَدْ أَخَذْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْنَا نَقُومُ، فَقَالَ: «عَلَى مَكَانِكُمَا» فَجَاءَ فَقَعَدَ بَيْنِي وَبَيْنَهَا، حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى بَطْنِي، فَقَالَ: «أَلاَ أَدُلُّكُمَا عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَا؟ إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا -أَوْ أَوَيْتُمَا إِلَى فِرَاشِكُمَا- فَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَكَبِّرَا أَرْبَعًا وَثَلاَثِينَ، فَهُوَ خَيْرٌ لَكُمَا مِنْ خَادِمٍ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 5361]
المزيــد ...
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது :
(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காயம் குறித்து (தம் தந்தை) நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், பாத்திமா, நபி (ஸல்) அவர்களை அங்கு காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே நாங்கள் எழுந்திருக்கப் போனோம். அவர்கள், ''நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்' என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள்.
அவர்களின் பாதங்கள் என் வயிற்றில்பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்). அப்போது அவர்கள், ''நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? 'நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது' அல்லது 'உங்கள் விரிப்புக்குச் செல்லும்போது' முப்பத்து மூன்று முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்' என்று சொன்னார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 5361]
நபி (ஸல்) அவர்களின் மகள் பாத்திமா, மாவு அரைத்ததால் தனது கையில் ஏற்பட்ட தழும்புகள்; குறித்து தனது தந்தையிடம் முறையிட்டார். சில கைதிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது, வீட்டு வேலைகளில் தனக்கு உதவ அவர்களில் ஒருவரைக் கேட்க நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அவ்வேளை நபியவர்கள் வீட்டில் இருக்கவில்லை. ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை கண்டு விவரத்தை கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வந்த போது, பாத்திமா (ரழி) அவர்கள் ஒரு பணியாளரைக் கேட்பதற்காக வந்துவிட்டு சென்ற செய்தியைக் ஆஇஷா (ரழி) நபியவர்களிடம் கூறினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பாத்திமா மற்றும் அலி (ரழி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அந்த நேரத்தில், இருவரும் படுக்கையில் படுத்து உறங்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளை நபியவர்கள் அவர்களுக்கு இடையே அமர்ந்தார்கள், அப்போது அலி (ரழி) தனது வயிற்றில் நபியவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை உணர்ந்தார். பின்னர் அவர்கள் இருவரிடமும் நபியவர்கள் கூறினார்கள்: ' நீங்கள் இருவரும் என்னிடம் ஒரு வேலைக்காரனைக் தருமாறு கேட்டதைவிடவும் சிறந்த ஒன்றை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்கள் இருவரும், 'ஆம்' என்றார்கள். அப்போது நபியவர்கள் அவர்களிடம் இவ்வாறு கூறினார்கள் : நீங்கள் இருவரும் இரவில் படுக்கைக்குச் செல்லும்போது, அல்லாஹு அக்பர் என்று 34 முறை சொல்லுங்கள். சுப்ஹானல்லாஹ் என்று 33 முறை சொல்லுங்கள். அல்ஹம்துலில்லாஹ் என்று 33 முறை சொல்லுங்கள். இந்த திக்ர் ஒரு வேலைக்காரனை விட உங்கள் இருவருக்கும் சிறந்தது என்றார்கள்.