عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضيَ اللهُ عنهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ:
«اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى، وَالْعَفَافَ وَالْغِنَى».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2721]
المزيــد ...
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுபவர்களாக இருந்தார்கள் :
யா அல்லாஹ்! நான் உன்னிடம், நேர்வழியையும், இறையச்சத்தையும், பத்தினித்தனத்தையும், தன்நிறைவையும் கேட்கின்றேன்.
[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 2721]
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு துஆக் கேட்பார்கள் : யா அல்லாஹ்! நான் உன்னிடம், நேர்வழியையும், (அதாவது, சத்தியத்தை அறிந்து, அதை நடைமுறைப்படுத்தும் நிலையான பாதையை) இறையச்சத்தையும், (அதாவது, கடமைகளை நிறைவேற்றி, தடைகளைத் தவிர்ப்பதையும்) பத்தினித்தனத்தையும், (அதாவது, அனுமதிக்கப்படாத, முறையற்ற சொல், செயற்களை விட்டும் விலகி நிற்கும் நிலையையும்) தன்நிறைவையும் (அதாவது, படைப்புக்களிடம் தேவை காணாமல், தனது ரப்பாகிய அல்லாஹ்விடம் மாத்திரமே தேவை காணும் நிலையை) கேட்கின்றேன்.