عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ:
يَا رَسُولَ اللَّهِ، نَرَى الجِهَادَ أَفْضَلَ العَمَلِ، أَفَلاَ نُجَاهِدُ؟ قَالَ: «لَا، لَكُنَّ أَفْضَلُ الجِهَادِ: حَجٌّ مَبْرُورٌ».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 1520]
المزيــد ...
உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதரே! அறப்போர் புரிவதை மிகச்சிறந்த அமலாக நாம் காண்கின்றோம். நாமும் அறப் போரில் கலந்துகொள்ளட்டுமா? அதற்கு நபியவர்கள் இல்லை, எனினும் அறப்போரில் மிகச்சிறந்தது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகும் எனக் கூறினார்கள் .
[சரியானது] - [இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்] - [புஹாரி - 1520]
அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதையும், எதிரிகளுடன் போராடுவதையும் நபித்தோழர்கள் சிறந்த அமல்களில் ஒன்றாகக் கருதிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தாங்(பெண்)களும் அறப்போர் புரியலாமா? என வினவினார்கள்.
அதற்கு நபியவர்கள், பெண்களுக்கான மிகச் சிறந்த அறப்போர் அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவின் அடிப்படையில் செய்யப்பட்ட இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகும் அது அல் குர்ஆனுக்கும் அஸ்ஸுன்னாவாகிய நபி வழிக்கும் முற்றிலும் முழுமையாக தோதுவாக அமைந்து, பாவத்தைவிட்டும் முகஸ்துதியை விட்டும் முற்றாக நீங்கியதாக அமைந்திருத்தல் வேண்டும்.