عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «مَنْ حَجَّ، فلَمْ يَرْفُثْ، وَلم يَفْسُقْ، رَجَعَ كَيَوْمَ وَلَدْتُهُ أُمُّهُ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "உடலுறவில் ஈடுபடாமல், பாவங்கள் செய்யாமல் ஹஜ் செய்தவர் தனது தாய் அன்று ஈண்டெடுத்த பாலகன் போன்று திரும்புவார்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஒருவர் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்து, மோசமான வார்த்தையோ, மோசமான செயலோ அவரிடமிருந்து வெளிப்படாமல், பாவங்களும் செய்யாமல் இருந்தால் ஒரு குழந்தை பாவங்களின்றி பிறப்பதைப் போன்று அந்த நபரும் பாவங்கள் மன்னிக்கப்பட்டு ஹஜ்ஜிலிருந்து திரும்புவார். இங்கு ஹஜ்ஜின் மூலம் மன்னிக்கப்படுவது சிறு பாவங்கள் மாத்திரமே, பெரும்பாவங்களுக்காகத் தௌபாச் செய்து பாவமன்னிப்புக் கோருவது அவசியமாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஆபாசமான செயற்பாடுகள், பாவங்களை விட்டும் ஹஜ் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துகின்றது.
  2. ஏற்கனவே இடம்பெற்ற பாவங்கள், தீங்குகளுக்குப் பரிகாரமாக ஹஜ் வணக்கம் அமைகின்றது.
  3. அனைத்து நிலைகளிலும் பாவங்கள் தடுக்கப்பட்டிருந்தாலும் அல்லாஹ்வின் புனித வீட்டில் ஹஜ் வணக்கத்தின் மகிமையைக் கருதி அச்சந்தர்ப்பந்தில் தடை மேலும் வலுயுறுத்தப்படுகின்றது.
  4. மனிதன் பிறக்கும் போது பாவங்களின்றி, அதிலிருந்து நிரபராதியாகவே பிறக்கின்றான், எனவே அவன் பிறருடைய பாவங்களை சுமக்க மாட்டான்.
மேலதிக விபரங்களுக்கு