عن عبد الله بن عباس رضي الله عنهما قال: كانت عُكَاظُ، ومَجِنَّةُ، وذُو المجَازِ أسوَاقَاً في الجاهلية، فَتَأَثَّمُوا أنْ يَتَّجِرُوا في المواسم، فنزلت: {ليس عليكم جناح أن تبتغوا فضلاً من ربكم} "البقرة" (198) في مواسم الحج.
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

ஜாஹிலிய்யாக் காலத்தில் உகாள், மஜின்னா, துல் மஜாஸ் ஆகியன சந்தைகளாக இருந்தன.(அவற்றில்) ஹஜ்ஜுடைய நாட்களில் வியாபாரம் செய்வதை (நபித் தோழர்கள்) பாவமானதாகக் கருதினார்கள் இது குறித்து (ஹஜ் காலங்களில் வியாபாரத்தின் மூலம்) உங்கள் இரட்சகனின்அருளைத் தேடிக்கொள்வதில் உங்களுக்கு எவ்விதக் குற்றமுமில்லை எனும் வசனம் ஹஜ்காலத்தில் இறங்கியது என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழி அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

குறித்த அந்த இடங்கள் இணைவைப்பாளர்களுக்கு சொந்தமான சந்தைகளாக இருந்தன.அவைகளில் ஹஜ்ஜுடைய நாட்களில் வியாபாரம் செய்யக் கூடியவர்களாக இருந்தனர்.ஆகவே அவ்விடங்களில் ஹஜ்ஜுடைய நாட்களில்வியாபாரம் செய்வதினால் பாவம் ஏற்படும் என ஸஹாபாக்கள் பயந்தனர்.இதனால் அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கி ஹஜ்ஜுடைய நாட்களில் ஹஜ்ஜின் கிரியைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதுடன் வியாபாரம் செய்வது ஹஜ்ஜின் கிரியைகளில் எவ்விதப்பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர்களுக்கு தெளிவு படுத்தினான்.அத்துடன் வியாபாரம் செய்வது அனுமதிக்கப்பட்டது என்றாலும் ஹஜ் கிரியைகளில் முழுமையாக ஈடுபடுவதுதான் மிகவும் ஏற்றமானதும் சிறந்த விடயமுமாகும்

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி ஹவுஸா மலயாளம்
மொழிபெயர்ப்பைக் காண