ஹதீஸ் அட்டவணை

எனது வயது ஏழு வருடங்களாக இருக்கும் போது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றி இருக்கிறேன்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி(ஸல்) அவர்கள் (ஒட்டகத்தில் பல்லக்குஅமைக்காமல்) ஒட்டகத்தின் சேணத்துடன் (இணைந்த) இருக்கையின் மீதே அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றார்கள், அதுவே அவர்களின் பொதி சுமக்கும் ஒட்டகமாகவும் இருந்தது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ஜாஹிலிய்யாக் காலத்தில் உகாள் மஜின்னா, துல் மஜாஸ் ஆகியன சந்தைகளாக இருந்தன.(அவற்றில்) ஹஜ்ஜுடைய நாட்களில் வியாபாரம் செய்வதை (நபித் தோழர்கள்) பாவமானதாகக் கருதினார்கள். இது குறித்து (ஹஜ் காலங்களில் வியாபாரத்தின் மூலம்) உங்கள் இரட்சகனின் அருளைத் தேடிக்கொள்வதில் உங்களுக்கு எவ்விதக் குற்றமுமில்லை எனும் வசனம் ஹஜ் காலத்தில் இறங்கியது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நீ, பயனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற ஒரு கல் மாத்திரமே என்பதை நான் அறிவேன். நபியவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிருக்காவிட்டால், நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது