عن أنس بن مالك رضي الله عنه : أنَّ رسول الله صلى الله عليه وسلم حَجَّ على رَحْلٍ وكانتْ زَامِلَتَهُ.
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

நபி(ஸல்) அவர்கள் (ஒட்டகத்தில் பல்லக்கு அமைக்காமல்) ஒட்டகத்தின் சேணத்துடன் (இணைந்த) இருக்கையின் மீதே அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றதாகவும் அதுவே அவர்களின் பொதி சுமக்கும் ஒட்டகமாகவும்இருந்ததாகவும் அனஸ் இப்னு மாலிக் அவர்கள் அறிவித்தார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் பல்லக்கில்லாத ஒட்டகத்தின் மீது ஹஜ்ஜுக்குச் சென்றார்கள்.அத்துடன் அவரின் உணவையும்,பொருட்களையும் சுமந்து செல்வதற்கான வேறு ஒட்டகம் நபி (ஸல்) அவர்களுக்கு இருக்கவில்லை. அவைகளை தான் பிரயாணம் செய்த ஒட்டகத்திலேயே வைத்துக் கொண்டார்கள். இச்செயல் நபியவர்களின் எளிமையையும், உலகத்தில் அவரின் குறைவான ஈடுபாட்டையும் காட்டுகிறது. மாறாக இந்த ஹதீஸ் ஹஜ்ஜின் போது சொகுசான, ஆடம்பரமான வாகனங்களில் சவாரி செய்தல் ஹராம் என்பதைக் காட்டாது. ஹஜ்ஜின் போது சொகுசையும் ஆடம்பரத்தையும் குறைத்துக் கொள்வதே நபியவர்களை ஹஜ்ஜின் போது பின்பற்றுவதில் மிகச்சிறந்த விடயமாகும் என்பதை காட்டும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி ஹவுஸா மலயாளம்
மொழிபெயர்ப்பைக் காண