+ -

عَنْ أَبِي العَبَّاسِ سَهْلِ بْنِ سَعِدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمِلْتُهُ أَحَبَّنِي اللَّهُ وَأَحَبَّنِي النَّاسُ، فَقَالَ:
«ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبُّكَ اللَّهُ، وَازْهَدْ فِيمَا عِنْدَ النَّاسِ يُحِبُّكَ النَّاسُ».

[قال النووي: حديث حسن] - [رواه ابن ماجه وغيره بأسانيد حسنة] - [الأربعون النووية: 31]
المزيــد ...

அபுல் அப்பாஸ் ஸஹ்ல் இப்னு ஸஃத் அஸ்ஸாஇதி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே: ஒரு செயலை எனக்குக் காட்டித்தாருங்கள், அதை நான் செய்தால், அல்லாஹ்வும் மக்களும் என்னை நேசிக்க வேண்டும்' என்று கேட்டார்.
அதற்கு நபியவர்கள் 'உலக வாழ்க்கையில் பற்றற்றவராக இருங்கள், அல்லாஹ் உம்மை நேசிப்பான். மக்களிடம் இருப்பவற்றில் ஆசைகொள்ளாதீர்கள், அவர்கள் உம்மை நேசிப்பார்கள்.' எனப்பதிலளித்தார்கள்.

[قال النووي: حديث حسن] - [رواه ابن ماجه وغيره بأسانيد حسنة] - [الأربعون النووية - 31]

விளக்கம்

ஒரு மனிதர், அல்லாஹ்வும் மனிதர்களும் நேசிக்கக்கூடிய ஒரு செயலின் பால் தன்னை வழிப்படுத்துமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், உலகில் தனக்கு தேவையற்றதையும், மறுமைக்கு எவ்விதப் பயனையும் பெற்றுத்தராதவதற்றையும் விட்டு விடுவதோடு, மார்கத்தில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவற்றை விட்டும் விலகி இருக்க வேண்டும். அப்போது உம்மை அல்லாஹ் நேசிப்பான் என்றார்கள். அத்துடன் மக்களிடம் உள்ளவற்றில் ஆசைகொள்ளாது இருப்போரை, மக்கள் இயல்பில் விரும்புவார்கள். யார் அவர்களிடம் இருப்பவற்றில் பேராசைகொண்டு அவர்களுக்கு எதிராக போட்டியாக செயற்படும் போது அதனை மக்கள் வெறுப்பர். ஆகவே யார் இவ்வாறு மனிதர்கள் வைத்திருப்பவற்றில் ஆசை கொள்ளாது எளிமையாக இருக்கிறாரோ அவரை மக்கள் பெரிதும் விரும்புவார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. உலக வாழ்க்கையில் எளிமையாக இருப்பதன் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல். எளிமையாக இருப்பது என்பது மறுமைக்கு பயன்தராதவற்றை விட்டுவதை குறிக்கும்.
  2. பேணுதலாக இருப்பதை விட எளிமையாக வாழ்தல் என்பது மிக உயர்ந்த படித்தரமாகும். காரணம் பேணுதலாக இருப்பது என்பது தனக்கு பாதிப்பை ஏற்படுத்துபவற்றை தவிர்ப்பதை குறிக்கும். ஸுஹ்த் (எளிமை) என்பது மறுமைக்கு பயன்தராதவற்றை விட்டுவிடுவதை குறிக்கும்.
  3. இமாம் ஸின்தி (ரஹ்; அவர்கள் கூறுகிறார்கள் : உலகம் மனிதர்களால் நேசிக்கப்படக்கூடிய ஒன்றாகும். அதில் பிறரை எதிர்த்து போட்டி போட்டால் அவர் அவர்களுடன் போட்டி போட்டு எதிர்க்கும் அளவுக்கு அவர்களின் வெறுப்பை பெற்றுக் கொள்கிறார். யார் நேசிக்கும் ஒன்றை அதனை விரும்புவோருக்கு விட்டுவிட்டால், அவர்களின் உள்ளத்தில் காணப்படும் நேசத்தின் அளவுக்கு அதனை விட்டுத்தந்தவருக்கான நேசத்தை தருவார்கள்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية الليتوانية الدرية الصربية الطاجيكية Кинёрвондӣ المجرية التشيكية الموري Канада الولوف Озарӣ الأوزبكية الأوكرانية الجورجية المقدونية الخميرية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு