عن جابر بن عبد الله رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال:
«كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ».

[صحيح] - [رواه البخاري من حديث جابر، ورواه مسلم من حديث حذيفة] - [صحيح البخاري: 6021]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'நற் செயல்கள் அனைத்தும் தர்மமாகும்.

[சரியானது] - [இதனை ஜாபிர் (ரழி) அவர்கள் வாயிலாக இமாம் புஹாரியும், ஹுதைபா (ரழி) அவர்கள் வாயிலாக இமாம் முஸ்லிமும் பதிவுசெய்துள்ளனர்] - [புஹாரி - 6021]

விளக்கம்

பிறருக்கு செய்யும் உபகாரமும், பயன்படத்தக்க ஒவ்வொரு வார்த்தையும் செயலும் தர்மமாகும், அதற்கு கூலியும், வெகுமதியும் உண்டு என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தர்மம் என்பது மனிதன் தன்னிடமிருந்து வழங்கும் செல்வத்துடன் மாத்திரம் வரையறுக்கப்பட்டதன்று. மாறாக மனிதன் செய்யும் நற்செயல்கள் மற்றும் அவன் பேசும் வார்த்தைகள் மற்றும் பிறர் பயனடையவதற்கு சேர்ப்பிக்கும் அனைத்து சேவைகளையும் குறிக்கும்.
  2. நற்செயல், மற்றும் பிறருக்கு பயனளிக்கும் அனைத்தையும் செய்ய இந்நபிமொழி ஊக்குவிக்கின்றது.
  3. எந்த ஒரு நற்செயலும் சிறியதாக இருந்தாலும் அதனை துச்சமாய் கருதாதிருத்தல்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (67)
மேலதிக விபரங்களுக்கு