عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا، وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا، وَصَلُّوا عَلَيَّ؛ فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ».
[حسن] - [رواه أبو داود] - [سنن أبي داود: 2042]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'உங்களது வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், எனது சமாதியைக் கொண்டாடும் இடமாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், என் மீது நீங்கள் ஸலவாத் கூறுங்கள், நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது ஸலவாத் என்னை வந்தடைகின்றது'.
[ஹஸனானது-சிறந்தது] - [இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்] - [سنن أبي داود - 2042]
ஸுன்னத்தான தொழுகைகள் போன்ற எந்த வணக்கமுமின்றி வீடுகளை செயலிழக்கச் செய்து மண்ணறைகளைப் போன்று ஆக்க வேண்டாமென நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தடுத்துள்ளார்கள். நபியவர்களின் கப்ரை அடிக்கடி தரிசித்து, வழமையான முறையில் அந்த இடத்தில் ஒன்றுகூடுவது இணைவைப்பிற்கு இட்டுச் செல்லும் வழியாக அமைந்து விடும் என்பதனால் அதனைத் தடுத்தார்கள். பூமியின் எந்த இடத்திலிருந்தாலும் நபியவர்கள் மீது ஸலவாத்தும், ஸலாமும் கூறுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். ஏனென்றால் அருகில் இருப்பவராயினும், தூரத்தில் இருப்பவராயினும் அவர்களின் ஸலவாத்துக்கள் ஒரே மாதிரியாகவே அவருக்கு எத்திவைக்கப்படுகின்றன. ஆகையால் அவரின் மண்ணறைக்கு அடிக்கடி செல்லவேண்டி அவசியம் கிடையாது.