عَن ابْنِ عُمَرَ رضي الله عنهما:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، رَفَعَهُمَا كَذَلِكَ أَيْضًا، وَقَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الحَمْدُ»، وَكَانَ لاَ يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 735]
المزيــد ...
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தம்தோல்களுக்கு நேராகத் கைகளை உயர்த்துவார்கள். ருகூஉவிற்காக 'தக்பீர்' கூறும்போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போதும் அவ்வாறே (தோல்களுக்கு நேராக) இரு கைகளையும் மீண்டும் உயர்த்துவார்கள்.
மேலும் (ருகூவிலிருந்து எழும்போது) 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்று கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும்போதோ சஜ்தாவிலிருந்து எழும்போதோ) இவ்வாறு செய்ய மாட்டார்கள் (கைகளை உயர்த்த மாட்டார்கள்).
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 735]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையின் போது மூன்று நிலைகளில் தோல்பட்டைக்கு நேராக தனது இரு கைகளையும் உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள். அதாவது:தோள்பட்டை என்பது மூட்டுக்கும் கைக்கும் இடைப்பட்ட பகுதி.
முதலாவது இடம் : தொழுகையின் ஆரம்பத் தக்பீரான இஹ்ராம் தக்பீர் கூறுகையில்.
இரண்டாவது இடம் : ருகூஉ செய்ய தக்பிர் கூறும் போது ,
மூன்றாவது : ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் ரப்பனா வலகல் ஹம்த்' என்று கூறும் போது. பொருள் : தன்னைப் புகழ்ந்தவனின் புகழுரையை அல்லாஹ் செவிமடுத்தான். எங்கள் இரட்சகனே புகழனைத்தும் உனக்கே உரியது.
ஸஜ்தாவைத் தொடங்கும்போதோ அல்லது அதிலிருந்து எழும்போதோ நபியவர்கள் கைகளை உயர்த்தமாட்டார்கள்.