عن جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الْأُمُورِ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ، يَقُولُ: «إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالْأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ، ثُمَّ لِيَقُلِ: اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ، وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي، وَمَعَاشِي، وَعَاقِبَةِ أَمْرِي» أَوْ قَالَ: «عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ، فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي» أَوْ قَالَ: «فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ، فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ أَرْضِنِي» قَالَ: «وَيُسَمِّي حَاجَتَه».

[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 1162]
المزيــد ...

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நபி (ஸல்) அவர்கள் எமக்கு, அல்குர்ஆனின் ஒரு ஸூராவைக் கற்றுத் தருவது போன்று, எல்லா விடயங்களிலும் நன்மையைக் கேட்பதையும் கற்றுத் தருவார்கள். நபியவர்கள் இவ்வாறு கூறுவார்கள் : உங்களில் ஒருவர் ஏதாவது (முக்கிய) விடயத்தைச் செய்ய நாடினால், கடமையல்லாத இரு ரக்அத்கள் தொழுதுவிட்டு, பின்வருமாறு கூறட்டும் : 'யா அல்லாஹ்! உனது அறிவைக் கொண்டு உன்னிடம் நன்மையைக் கேட்கின்றேன். உன்னுடைய சக்தியைக் கொண்டு உன்னிடம் ஆற்றலைக் கேட்கின்றேன். உன்னுடைய பேருபகாரத்தில் இருந்து உன்னிடம் கேட்கின்றேன். நீயே ஆற்றல் மிக்கவன். என்னிடம் ஆற்றல் கிடையாது. நீயே அறிந்தவன். நான் அறியமாட்டேன். மறைவான வற்றை அதிகம் அறிந்தவன் நீயே! யா அல்லாஹ்! இந்த விடயம், எனது மார்க்கத்திற்கும், வாழ்க்கைக்கும், எனது இறுதி முடிவுக்கும் - அல்லது எனது உடனடியான, தாமதமான விடயங்களுக்கும் - நன்மையானதாக இருந்தால், அதை எனக்கு விதித்து விடுவாயாக. மேலும் அதனை எனக்கு இலகுபடுத்தி விடுவாயாக! பின்பு எனக்கு அதில் பரகத் செய்து தருவாயாக! இந்த விடயம், எனது மார்க்கத்திற்கும், வாழ்க்கைக்கும், எனது இறுதி முடிவுக்கும் - அல்லது எனது உடனடியான, தாமதமான விடயங்களுக்கும் - தீமையானதாக இருந்தால், என்னை விட்டும் அதைத் திருப்பிவிடுவாயாக! மேலும், அதையும் என்னை விட்டுத் திருப்பிவிடுவாயாக! நன்மை - எங்கிருந்த போதிலும் - அதை எனக்கு விதித்து விடுவாயாக! பின்பு எனக்கு அதில் திருப்தியைத் தருவாயாக! அவர் தனது தேவையைக் குறித்துச் சொல்வார் என்றும் அதில் வந்துள்ளது.

[சரியானது] - [இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்] - [புஹாரி - 1162]

விளக்கம்

ஒரு முஸ்லிம், தன்னால் சரியான நிலையை அறிந்து கொள்ளமுடியாத ஒரு விடயத்தைச் செய்ய நாடினால், அவர் இஸ்திகாராவுடைய தொழுகையைத் தொழுமாறு மார்க்கம் காட்டியுள்ளது. அதாவது, நபி (ஸல்) அவர்கள், அல்குர்ஆனின் ஒரு ஸூராவைக் கற்றுத் தருவது போன்று, எல்லா விடயங்களிலும் நன்மையைக் கேட்பதையும் கற்றுத் தருவார்கள். கடமையல்லாத இரு ரக்அத்கள் தொழுதுவிட்டு, பின்வருமாறு கூறி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும் : 'யா அல்லாஹ்! அனைத்தையும் அடைவளைத்துள்ள விசாலமான (உனது அறிவைக் கொண்டு) இரு விடயங்களில் சிறந்ததை அடைய பாக்கியம் செய்யுமாறு கேட்டு, (உன்னிடம் நன்மையைக் கேட்கின்றேன். உன்னுடைய சக்தியைக் கொண்டு உன்னிடம் ஆற்றலைக் கேட்கின்றேன்.) என்னைச் சக்தியுள்ளவனாக ஆக்குமாறு கேட்கின்றேன். ஏனெனில், உன்னைக் கொண்டே தவிர, எதையும், தவிர்க்கவும், செய்யவும் எந்த சக்தியும் எனக்கு இல்லை. (உன்னுடைய மகத்தான) விசலமான (பேருபகாரத்தில்) பேருதவி (இருந்து உன்னிடம் கேட்கின்றேன்.) ஏனெனில், எனது உதவி நீ செய்யும் உபகாரமே தவிர, எந்த அருட்கொடைகளிலும் நீ யாருக்கும் கடமைப்பட்டவன் அல்ல. (நீயே) அனைத்துக்கும் (ஆற்றல் மிக்கவன்.) நானுமோ இயலாதவன், பலவீனமானவன். (என்னிடம்) உனது உதவியைக் கொண்டே தவிர, எந்தவொன்றுக்கும் (ஆற்றல் கிடையாது. நீயே) வெளிப்படையானவை, மறைவானவை, நன்மை, தீமை என அனைத்தையும் முழுமையாக அறிந்துள்ள, உனது விசாலமான அறிவைக்கொண்டு (அறிந்தவன். நான்) உனது அருளையும், நேர்வழியையும் கொண்டே தவிர எதையும் (அறியமாட்டேன்.) (மறைவானவற்றை அதிகம் அறிந்தவன் நீயே!) ஒட்டுமொத்த அறிவும், தடையில்லாமல் செயற்படும் அதிகாரமும் உன்னிடமே உள்ளது. ஏனையோருக்கு அவற்றில் நீ விதித்த, சக்தியை வழங்கிய அளவு மாத்திரமே உண்டு. பின்பு முஸ்லிம் தனது தேவையைக் குறித்துக் கூறி, இவ்வாறு தனது இறைவனிடம் கேட்பார். (யா அல்லாஹ்!) எனது விவகாரத்தை நான் உன்னிடம் பொறுப்புச் சாட்டிவிட்டேன். உனது அறிவில் (இந்த விடயம்,) உதாரணமாக இந்த வீட்டை வாங்குவது, அல்லது இந்த வாகனத்தை வாங்குவது, அல்லது இந்தப் பெண்ணைத் திருமணம் செய்வது போன்றவை இந்த விடயம் உனது முந்திய அறிவில், எனது விடயங்களின் பிடிகயிறாகிய (எனது மார்க்கத்திற்கும்,) இவ்வுலக (வாழ்க்கைக்கும் எனது இறுதி முடிவுக்கும்)எனது விவகாரங்களின் இறுதி நிலைக்கும் - (அல்லது எனது உடனடியான, தாமதமான விடயங்களுக்கும்) அதாவது, உலகிலும், மறுமையிலும் (- நன்மையானதாக இருந்தால், அதை எனக்கு விதித்துவிடுவாயாக.) எனக்கு அதனை இலகுபடுத்தி, நிறைவேற்றித் தா! (மேலும் அதனை எனக்கு இலகுபடுத்தி விடுவாயாக! பின்பு எனக்கு அதில் பரகத் செய்து) மேலும் நன்மைகளை அதிகப்படுத்தித் (தருவாயாக!) அல்லாஹ்வே! (இந்த விடயம், எனது மார்க்கத்திற்கும், வாழ்க்கைக்கும், எனது இறுதி முடிவுக்கும் - அல்லது எனது உடனடியான, தாமதமான விடயங்களுக்கும் - தீமையானதாக இருந்தால், என்னை விட்டும் அதைத் திருப்பி விடுவாயாக! மேலும், அதையும் என்னை விட்டுத் திருப்பி விடுவாயாக! நன்மை - எங்கிருந்த போதிலும் - அதை எனக்கு விதித்து விடுவாயாக! பின்பு எனக்கு அதில்) மேலும் நான் விரும்பும், வெறுக்கும் உனது அனைத்து விதிகளிலும் (திருப்தியைத் தருவாயாக!).

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இந்தத் தொழுகையில் மகத்தான நன்மைகளும், பயன்களும் இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு இதைக் கற்றுக்கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளமை.
  2. நன்மையை வேண்டிப் பிரார்த்திப்பதும், அதற்குப் பின்னர், கூறப்படுள்ள துஆவை ஓதுவதும் விரும்பத்தக்கதாகும்.
  3. இஸ்திகாரா என்பது, தடுமாற்றத்தைத் தரும், அனுமதிக்கப்பட்ட எல்லா விடயத்திலும் விரும்பப் படும் ஒன்றாகும். ஆனால், கடமையான, ஸுன்னாவான விடயங்களில் இது வரமாட்டாது. ஏனெனில், அவற்றை செய்வதே அடிப்படையாகும். ஆனால் அவற்றோடு தொடர்புபட்ட விடயங்களில் அவர் இஸ்திகாரா கேட்கலாம். உதாரணமாக, ஹஜ் அல்லது உம்ராவுக்காக இணைத்து செல்லும் பயணத் தோழர்கள் தொடர்பாக இஸ்திகாராக் கேட்டல்.
  4. கடமைகள் மற்றும் ஸுன்னாக்களை செய்வதற்கு இஸ்திகாரா கேட்கப்படமாட்டாது. மேலும், ஹராமானவை மற்றும் வெறுக்கப்பட்டவற்றை விடுவதில் இஸ்திகாரா கேட்கப்படமாட்டாது.
  5. தொழகையை விட்டும் துஆ பிற்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், நபியவர்கள் 'பின்னர் கூறட்டும்' என்று கூறியுள்ளார்கள். ஸலாம் கூறுவதற்கு முன்னர் ஓதப்பட்டால், அதுவும் அனுமதிக்கப்பட்டதே.
  6. ஓர் அடியான் அனைத்து விடயங்களையும் அல்லாஹ்வின் மீது சாட்டுவது அவசியமாகும். தனது பலம், சக்தி அனைத்தை விட்டும் நீங்குவதும் கட்டாயமாகும். ஏனெனில், அல்லாஹ்வைக் கொண்டே தவிர அவனால் எதையும் தவிர்க்கவோ, செய்யவோ முடியாது.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية الرومانية المجرية الموري Малагашӣ Канада الولوف الأوكرانية الجورجية المقدونية الخميرية البنجابية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண