عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رضي الله عنه أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِذَا رَأَى أَحَدُكُمُ الرُّؤْيَا يُحِبُّهَا فَإِنَّهَا مِنَ اللَّهِ، فَلْيَحْمَدِ اللَّهَ عَلَيْهَا وَلْيُحَدِّثْ بِهَا، وَإِذَا رَأَى غَيْرَ ذَلِكَ مِمَّا يَكْرَهُ، فَإِنَّمَا هِيَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَسْتَعِذْ مِنْ شَرِّهَا، وَلاَ يَذْكُرْهَا لِأَحَدٍ، فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 7045]
المزيــد ...
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக அபூ ஸஈத் அல்குத்ரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஒரு மனிதர் விருப்பமான ஒரு கனவைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது. எனவே, அவர் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, அதை (மக்களுக்குக்) கூறவும். அவ்வாறல்லாமல் வெறுக்கும் ஏதாவதொன்றைக் கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வரும். அதன் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதுடன், யாரிடமும் அதைக் கூறாமலிருக்கட்டும். அப்போது, அது அவருக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தமாட்டாது.
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري - 7045]
தூக்கத்தில் வரும் மகிழ்ச்சியான கனவுகள் அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன என்பதை நபியவர்கள் கூறிவிட்டு, அதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, அதை ஏனையோருக்குக் கூறுமாறு அறிவுறுத்துகின்றார்கள். வெறுப்பான, கவலையான ஏதாவதொன்றைக் கண்டால், அது ஷைத்தானிடமிருந்து வரக்கூடியது எனவும், அதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதோடு, அதை யாரிடமும் கூறாமல் இருக்கட்டும் எனவும் அறிவுறுத்தியதோடு, அப்போது அது பாதிப்பை ஏற்படுத்தமாட்டாது என்றும் கூறினார்கள். அதாவது, மேற்கூறப்பட்ட அம்சங்களை, கனவினால் ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்புக்களைத் தடுக்கும் காரணிகளாக அல்லாஹ் வைத்துள்ளான்.