عَنْ صُهَيْبٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ، فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ، فَكَانَ خَيْرًا لَهُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2999]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸுஹைப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“ஓர் இறை விசுவாசியின் காரியங்கள் ஆச்சரியமானவை. அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு நலவாக அமைந்து விடுகிறது. இது ஓர் இறை விசுவாசியைத் தவிர மற்றெவருக்கும் அவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியூட்டும் விடயம் ஏற்பட்டால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நலவாய் அமைகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமை செய்கிறான். அதுவும் அவனுக்கு நலவாய் அமைகிறது.”
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2999]
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஃமினின் விவகாரம் மற்றும் நிலைமைகள் குறிந்து ஆச்சரியப்படுகிறார்கள். ஏனென்றால் அவனுடைய எல்லா சூழ்நிலைகளும் நன்மையாகவே உள்ளன. அதே வேளை விசுவாசிகளைத் (முஃமினைத்) தவிர வேறு யாருக்கும் இது கிடைப்பதில்லை. அவனுக்கு மகிழ்சியான – மங்கலகரமான ஒரு விடயம் நிகழ்ந்தால் அதற்காக அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான், ஆகவே அவன் நன்றி செலுத்தியமைக்கான கூலியை அவன் அடைந்து கொள்கிறான் -பெற்றுக் கொள்கிறான். அவனுக்கு தீங்கான –துன்பகரமான – விடயம் ஏற்பட்டால் அவன் அதற்காக பொறுமை காத்து அதற்காக அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்க்கிறான். இந்த வகையில் அவனும் தனது பொறுமைக்காக கூலியை பெற்றுக்கொள்வதோடு, ஏற்பட்ட துன்பம் நீங்கும் வரையில் அவன் கடந்து போகும் சகல நிலைகளிலும் அவனுக்கு கூலி கிடைக்கிறது.