عَنِ الْبَرَاءِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا سَجَدْتَ، فَضَعْ كَفَّيْكَ وَارْفَعْ مِرْفَقَيْكَ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 494]
المزيــد ...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அல் பரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
நீ ஸுஜூது செய்தால் உனது இரு உள்ளங்கைகளையும் நிலத்தில் வைக்கவும். முழங்கைகளை உயர்த்திக் கொள்ளவும்.

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم - 494]

விளக்கம்

தொழுகையில் ஸுஜூதில் இரு கைகளும் எவ்வாறு இருக்க வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள். அதாவது தனது இரு உள்ளங்கைகளையும், விரல்கள் கிப்லாவை முன்னோக்கி, சேர்க்கப்பட்ட வண்ணம் நிலத்தில் பட வைத்தல். இரு முழங்கைகளையும் நிலத்தை விட்டு உயர்த்தி விலாம்புறங்களில் இருந்து விலக்கி வைத்தல்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தொழுகையாளி தனது இரு உள்ளங்கைகளையும் நிலத்தில் பட வைக்க வேண்டும். இரு உள்ளங்கைகளும் சுஜூதின் ஏழு உறுப்புக்களில் இரு உறுப்புகள் ஆகும்.
  2. இரு முன்னங்கைகளையும் நிலத்தில் படாமல் உயர்த்தி வைப்பது விரும்பத்தக்கதாகும். முன்னங்கைகளை, ஐவாய் மிருகங்கள் போன்று நிலத்தில் விரித்து வைப்பது வெறுக்கத்தக்கதாகும்
  3. வணக்கத்தில் ஆர்வம், உற்சாகம், உறுதி என்பவற்றை வெளிக்காட்டுவது மார்க்கம் காட்டித் தந்துள்ள ஒன்றாகும்.
  4. தொழுகையாளி ஸுஜூதில் எல்லா உறுப்புகளையும் சரியாகப் பயன்படுத்தினால், ஒவ்வொரு உறுப்பும் வணக்கத்தில் தமக்குரிய பங்கை பெற்றுக் கொள்ளும்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (48)
மேலதிக விபரங்களுக்கு