عن عائشةَ أُمِّ المُؤْمِنينَ رضي الله عنها:
أن النبي صلى الله عليه وسلم كان لا يَدع أربعا قَبل الظهر وركعتين قبل الغَدَاة.

[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 1182]
المزيــد ...

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள் :
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ழுஹருக்கு முந்திய நான்கு ரக்அத்களையும், ஸுபஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்களையும் விடவே மாட்டார்கள்.

[சரியானது] - [இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்] - [புஹாரி - 1182]

விளக்கம்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், தனது வீட்டில், உபரியான தொழுகைகளான, ழுஹருக்கு முந்திய நான்கு ரக்அத்களையும் இரு ஸலாம்களுடனும், பஜ்ருக்கு முந்திய இரு ரக்அத்களையும் விடாமல் தொழுதுவருவார்கள் என ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ழுஹருக்கு முன்னர் நான்கு ரக்அத்களையும், ஸுபஹுக்கு முன்னர் இரு ரக்அத்களையும் பேணித் தொழுது வருவது விரும்பத்தக்கதாகும்.
  2. முன், பின் ஸுன்னாக்கள் வீட்டில் தொழப்படுவதே சிறந்தது. இதனால் தான் இதனை ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (44)