عَنْ أُمِّ حَبِيبَةَ رضي الله عنها زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالت: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعٍ بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ».

[صحيح] - [رواه أبو داود والترمذي والنسائي وابن ماجه وأحمد] - [سنن الترمذي: 428]
المزيــد ...

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுவதைக் கேட்டதாக, அவர்களது மனைவியாகிய உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ழுஹருக்கு முன்னர் நான்கு ரக்அத்களையும், பின்னர் நான்கு ரக்அத்களையும் யார் பேணித் தொழுதுவருகின்றாரோ, அவரை அல்லாஹ் நரகின் மீது ஹராமாக்கிவிடுவான்.

[صحيح] - [رواه أبو داود والترمذي والنسائي وابن ماجه وأحمد] - [سنن الترمذي - 428]

விளக்கம்

நபிலான தொழுகைகளான, ழுஹருக்கு முன்னர் நான்கு ரக்அத்களையும், பின்னர் நான்கு ரக்அத்களையும் யார் பேணித் தொழுது வருகின்றாரோ, அல்லாஹ் அவரை நரகின் மீது ஹராமாக்கி விடுவான் என நபியவர்கள் நற்செய்தி கூறுகின்றார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ளுஹருக்கு முன்னரும், பின்னரும் நான்கு ரக்அத்களைப் பேணித் தொழுதுவருவது விரும்பத்தக்கதாகும்.
  2. பர்ளான தொழுகைகளுக்கு முன்னரான தொழுகைகளில் பல நுட்பங்கள் உள்ளன. உதாரணமாக, பர்ளான தொழுகையில் நுழைய முன்னர், தொழுகையாளியின் உள்ளத்தை வணக்கத்திற்காகத் தயார்படுத்தல். பின்னரான ஸுன்னாக்களிலும், பர்ளுகளில் விடப்பட்ட குறைகளை ஈடுசெய்தல் போன்ற நுட்பங்கள் உள்ளன.
  3. முன், பின் ஸுன்னாக்களில், நன்மை அதிகரிக்கப்படல், பாவங்கள் மன்னிக்கப்படல், அந்தஸ்துக்கள் உயர்த்தப்படல் போன்ற மாபெரும் பயன்கள் உள்ளன.
  4. இந்த ஹதீஸைப் போன்று, வாக்குகளை உள்ளடக்கிய ஹதீஸ்கள் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னாக்களின் நிலைப்பாடு, அவர்கள் தவ்ஹீதில் மரணித்திருப்பது அவசியம் என்பதே! அதுபோன்று, இங்கு நாடப்படுவது நிரந்தரமாக நரகில் இருக்கமாட்டார் என்பதுவே. ஏனெனில், ஓரிறைக் கொள்கையில் இருந்துகொண்டு பாவம் செய்பவர்கள் தண்டனைக்குத் தகுதியானவர்கள். ஆனால், அவ்வாறு தண்டிக்கப்பட்டாலும், நிரந்தரமாக நரகில் இருக்க மாட்டார்கள்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (47)