+ -

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رضي الله عنه:
أَنَّ رَسُولَ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِهِ، وَقَالَ: «يَا مُعَاذُ، وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ»، فَقَالَ: «أُوصِيكَ يَا مُعَاذُ لَا تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ تَقُولُ: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ».

[صحيح] - [رواه أبو داود والنسائي وأحمد] - [سنن أبي داود: 1522]
المزيــد ...

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நபியவர்கள் எனது கையைப் பிடித்து இவ்வாறு கூறினார்கள் : முஆதே! நான் உம்மை நேசிக்கின்றேன்! முஆதே! ஒவ்வொரு தொழுகையின் இறுதியிலும், 'அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வசுக்ரிக வஹுஸ்னி இபாததிக' (யா அல்லாஹ்! உன்னை நினைவுகூறவும், உனக்கு நன்றிசெலுத்தவும், அழகான முறையில் உன்னை வணங்கவும் எனக்கு நீ உதவுவாயாக) என்று கூறுவதை விட்டுவிட வேண்டாம். என நான் உமக்கு உபதேசம் செய்கின்றேன்.'

[ஸஹீஹானது-சரியானது] - [رواه أبو داود والنسائي وأحمد] - [سنن أبي داود - 1522]

விளக்கம்

நபியவர்கள் முஆத் (ரலி) அவர்களின் கையைப் பிடித்து இவ்வாறு கூறினார்கள் : நான் உம்மை நேசிக்கின்றேன்! முஆதே! ஒவ்வொரு தொழுகையின் இறுதியிலும், பின்வரும் துஆவைக் கூறுவதை விட்டுவிடவேண்டாம் என நான் உமக்கு உபதேசம் செய்கின்றேன். 'யா அல்லாஹ் (வணக்கத்திற்கு நெருக்கமாக்கி வைக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும், செயலிலும்) உன்னை நினைவுகூறவும், (கிடைக்கின்ற அருட்கொடைகளுக்காகவும், தடுக்கப்படுகின்ற சோதனைகளுக்காகவும்) நன்றிசெலுத்தவும், (உளத்தூய்மையுடனும், நபியவர்களைப் பின்பற்றியும்) அழகான முறையில் உன்னை வணங்கவும் எனக்கு உதவி செய்வாயாக!'

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஒரு மனிதர் அல்லாஹ்வுக்காக இன்னொருவரை நேசிப்பதை அறிவித்துவிடுவது மார்க்கம் காட்டித் தந்த ஒன்றாகும்.
  2. கடமையான, உபரியான எல்லாத் தொழுகையின் இறுதியிலும் இந்த துஆவை ஓதுவது ஸுன்னாவாகும்.
  3. குறைவான சொற்களைக் கொண்ட இந்த துஆவில், உலக, மறுமைத் தேவைகள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளன.
  4. சத்தியத்தை உபதேசித்துக் கொள்வது, நன்மை நாடிக் கொள்ளுதல், நன்மையிலும், இறையச்சத்திலும் ஒத்தாசையாக இருத்தல் போன்றவை அல்லாஹ்விற்காக நேசித்துக்கொள்வதன் பயன்களாகும்.
  5. தீபி அவர்கள் கூறுகின்றார்கள் : அல்லாஹ்வை நினைவுகூர்வதென்பது, உள்ளம் விசாலமடைதலுக்கான முன்னேற்பாடாகும். அவனுக்கு நன்றிசெலுத்துவது, அருட்கொடைகளைப் பாதுகாப்பதற்கான சரியான வழியாகும். அழகான முறையில் வணங்குவதென்பதன் நாட்டம், அல்லாஹ்வை விட்டும் திசைதிருப்பும் அனைத்தையும் விட்டும் நீங்கிக் கொள்வதாகும்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية الليتوانية الدرية الصربية Кинёрвондӣ الرومانية المجرية الموري Малагашӣ الفولانية Урумӣ Канада الولوف الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு