عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ:
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْسِلُ، أَوْ كَانَ يَغْتَسِلُ، بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 201]
المزيــد ...
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு 'ஸாஉ' முதல் ஐந்து 'முத்'து வரையிலான தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு 'முத்'து அளவுத் தண்ணீரில் வுழுச் செய்வார்கள்.'
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 201]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு ஸாஅ' முதல் ஐந்து முத் வரையிலான தண்ணீரைக் கொண்டு ஜனாபத்திலிருந்து தூய்மைபெற பயன்படுத்துபவர்களாக இருந்தார்கள். அதே வேளை அவர்கள் ஒரு முத் தண்ணீரைக் கொண்டு வுழுச் செய்வார்கள். ஒரு ஸாஃ' என்பது நான்கு முத் ஆகும். ஒரு முத் என்பது சராசரி உடல் எடை கொண்ட ஒருவரின் இரண்டு உள்ளங்கைகளின் அளவாகும்.