عَنْ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا، وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1900]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நீங்கள் அதை (பிறையைக்) கண்டால் நோன்பு பிடியுங்கள். அதைக் கண்டால் நோன்பு விடுங்கள். உங்களுக்கு அது மறைக்கப்பட்டால், அதைக் கணக்கிட்டுக் (30 ஆக பூரணப்படுத்திக்) கொள்ளுங்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 1900]
இங்கு நபியவர்கள் ரமழான் மாதம் ஆரம்பிப்பது மற்றும் நிறைவடைவதன் அடையாளங்களை விளக்கும் வகையில் இவ்வாறு கூறுகின்றார்கள் : நீங்கள் ரமழானின் தலைப்பிறையைக் கண்டால் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள். அதற்கும் உங்களுக்கும் மத்தியில் மேகம் மறைத்து, உங்களால் அதைக் காணமுடியாவிட்டால், ஷஃபான் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்திசெய்துகொள்ளுங்கள். ஷவ்வால் மாதத் தலைபிறையைக் கண்டால், நோன்பை விட்டுப் பெருநாள் எடுங்கள். அதற்கும் உங்களுக்கும் மத்தியில் மேகம் மறைத்து, உங்களால் அதைக் காணமுடியாவிட்டால், ஷவ்வால் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்திசெய்துகொள்ளுங்கள்.