عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قالَ: قالَ رَسُولُ اللَّهِ صلَّى اللَّهُ عليْه وسلَّمَ:
«دِينَارٌ أَنْفَقْتَهُ فِي سَبِيلِ اللهِ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ فِي رَقَبَةٍ، وَدِينَارٌ تَصَدَّقْتَ بِهِ عَلَى مِسْكِينٍ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ أَعْظَمُهَا أَجْرًا الَّذِي أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 995]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் பாதையில் நீ செலவழித்த ஒரு தீனார், ஓர் அடிமையை உரிமையிடுவதற்காக நீ செலவழித்த ஒரு தீனார், ஒரு ஏழைக்கு நீ தர்மமாக வழங்கிய ஒரு தீனார், உனது குடும்பத்திற்கு நீ செலவழித்த ஒரு தீனார். இவற்றில் அதிக நன்மை கொண்டது, உனது குடும்பத்திற்காக நீ செலவழிக்கும் தீனாரே.
[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 995]
இங்கு நபியவர்கள், செலவழித்தலின் சில வகைகளை விளக்கும் விதமாகப் பின்வருமாறு கூறுகின்றார்கள் : அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதற்கு செலவழிக்கும் தீனார், ஓர் அடிமையை உரிமையிடுவதற்காக செலவழிக்கும் தீனார், தேவையுள்ள ஓர் ஏழைக்கு செலவழிக்கும் தீனார், உனது குடும்பத்திற்காக செலவழிக்கும் தீனார். பின்பு நபியவர்கள், அவற்றில் மிகச் சிறந்தது, உனது குடும்பத்திற்காகவும், உனது செலவுக்கு உட்பட்டவர்களுக்காகவும் செலவழிக்கும் தீனாராகும் என்றும் கூறுகின்றார்கள்.