عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ وَلَبِسَ خُفَّيْهِ فَلْيُصَلِّ فِيهِمَا، وَلْيَمْسَحْ عَلَيْهِمَا ثُمَّ لَا يَخْلَعْهُمَا إِنْ شَاءَ إِلَّا مِنْ جَنَابَةٍ».
[صحيح] - [رواه الدارقطني] - [سنن الدارقطني: 781]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
உங்களில் ஒருவர் வுழூ செய்து, பின்னர் தனது காலுறைகளை அணிந்துகொண்டால், அவற்றுடனேயே தொழட்டும். அவற்றின் மீது மஸ்ஹு செய்துகொள்ளட்டும். பின்பு – அவர் நாடினால் - குளிப்புக் கடமையாகிவிட்டாலே தவிர, அதனைக் கழற்றவேண்டியதில்லை.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை அத்தாரகுத்தனீ பதிவு செய்துள்ளார்] - [سنن الدارقطني - 781]
இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் வுழூ செய்த பின்னர் தனது காலுறைகளை அணிந்து, அதற்குப் பின்னர் வுழூ முறிந்து மீண்டும் வுழூ செய்ய நாடினால், - அவர் விரும்பினால் - அவ்விரண்டின் மீதும் மஸ்ஹு செய்துவிட்டு, அவற்றுடனேயே தொழலாம் என்றும், குறிப்பிட்ட காலத்திற்கு அவற்றைக் கழற்றாமல் இருக்கலாம் என்றும் தெளிவுபடுத்துகின்றார்கள். ஆனால், அவருக்குக் குளிப்புக் கடமையாகவிட்டால், காலுறையைக் கழற்றிவிட்டுக் குளிக்கவேண்டும்.