عن عائشة رضي الله عنها قالت: «كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل أحْيَانِه».
[صحيح] - [رواه مسلم والبخاري معلقا. للفائدة: التعليق حذف الإسناد]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் தனது அனைத்து நேரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்பவராக இருந்தார்கள் என ஆஇஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஸஹீஹானது-சரியானது - புஹாரீ அவர்கள் உறுதியாக அறிவவித்திருக்கும் இந்த ஹதீஸ் "முஅல்லகானது" அதாவது ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரிலிருக்கும் ஒரு சில அறிப்பாளரைக் குறி்பிடாத நிலையில் அறிவித்த ஹதீஸாகும்

விளக்கம்

ஹதீஸ் விளக்கம் : "நபி (ஸல்) அவர்கள் தனது அனைத்து நேரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்பவராக இருந்தார்கள்", அதாவது தஸ்பீஹ், லாஇலாஹ இல்லல்லாஹ், தக்பீர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற அனைத்து வித திக்ருகளையும் செய்வார்கள், குர்ஆன் ஓதுவதும் அல்லாஹ்வை நினைவுகூர்தல் என்பதால் அதுவும் இவற்றுள் அடங்கும், ஏன் அதுதான் ஒரு வகையில் மிகச் சிறந்த திக்ராகும். "அனைத்து நேரங்களிலும்" என்றால் சிறு தொடக்கு, பெருந்தொடக்குள்ள நிலைகளிலும் கூட நபியவர்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வார்கள் என்பதாகும். இருப்பினும் குளிப்புக் கடமையான ஜனாபத்து நிலையில் அல்குர்ஆன் ஓதுவதை அறிஞர்கள் விதிவிலக்களித்துள்ளனர். ஏனெனில் அவர்கள் சுத்தமாகும் வரை பார்த்தோ, மனனமாகவோ அல்குர்ஆனை ஓத முடியாது. அலீ (ரலி) கூறுகின்றார்கள் நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையனவராக இல்லாத சந்தர்ப்பங்களில் எமக்கு அல்குர்ஆனை ஓதித் தருவார்கள். ஆதாரம் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜா. மாதவிடாய், மற்றும் பிரசவ இரத்தம் ஏற்பட்டுள்ள பெண்ணும் ஜனாபத்துடையவர்களுடன் சேர்வார்களா என்பதில் கருத்து வேற்றுமை உள்ளது. மனனமாக ஓத முடியுமென்பதே வலுவான கருத்தாகும். அவர்கள் ஜனாபத்துடையவர்களுடன் இணைய மாட்டார்கள், ஏனெனில் அவ்விரு நிலைகளும் பெண்களது கட்டுப்பாட்டிலில்லை, அவற்றின் காலங்கள் நீடிக்கின்றன. எந்நிலையிலும் அல்குர்ஆன் ஓதலாம் என்ற பொதுவிதியிலிருந்து பின்வரும் நிலைகள் விதிவிலக்கு அளிக்கப்படுகன்றன : மல, சலம் கழிக்கும் போது, உடலுறவின்போது, குளியலறை, கழிவறைகள் போன்ற அல்குர்ஆனுக்குப் பொருத்தமில்லாத அசுத்தமான இடங்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்லாஹ்வை நினைவுகூர்வதற்காக சிறு, பெரு தொடக்குகளிலிருந்து தூய்மையாக வேண்டுமென்ற நிபந்தனை கிடையாது. எனவே ஒரு முஸ்லிம் எந்நேரமும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்யலாம், புகழலாம், லாஇலாஹ இல்லல்லாஹ் திருக்கலிமாவைக் கூறலாம், பாவமன்னிப்புக் கோரலாம், ஹதீஸில் இடம்பெற்றுள்ளதால் ஜனாபத்துடன் இல்லாத நிலையில் குர்ஆனும் ஓதலாம்.
  2. இந்நபிமொழியின் பொதுவான கருத்து மாதவிடாய், பிரசவ இரத்தம் ஏற்பட்டுள்ள பெண்களுக்கும் குர்ஆன் ஓதலாம் என்பதையே அறிவிக்கின்றது. இருப்பினும் நேரடியாக அதனைத் தொடாமல், கையுறை போன்ற திரைக்குப் பின்னால் தொடலாம்.
  3. நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து அல்லாஹ்வை நினைவுகூர்வார்கள்.
  4. நபி (ஸல்) அவர்களது நிலைகளைப் பற்றி அன்னை ஆஇஷா (ரலி) அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.
மேலதிக விபரங்களுக்கு