+ -

عن أبي سليمان خالد بن الوليد رضي الله عنه قال: لقد انقطعت في يدي يوم مُؤْتَةَ تسعة أسياف، فما بقي في يدي إلا صَفِيحَةٌ يمانية.
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

அபு சுலைமான் காலித் இப்னு வலீத் (ரலி) அறிவிக்கிறார்கள். முஃதா போரின் போது (தீவிரமாகப் போர் புரிந்ததால்) என் கையில் இருந்த ஒன்பது வாட்கள் உடைந்து போயின. என்னுடைய அகலமான யமன் நாட்டு வாள் ஒன்றை தவிர வேறு எதுவும் என்னிடம் மிஞ்சவில்லை.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

விளக்கம்

காலித் இப்னுல் வலீத் அவர்கள் அல்லாஹ்வின் வாள், இஸ்லாத்தின் குதிரை வீரர், போர்களின் சிங்கம், முஜாஹித்களின தலைவர் என பல சிறப்புப் பெயர்களுக்கு உரித்தானவராவார். ஹிலிய்யா காலத்தில் குரைஷியர்களின் தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தவர் இவர் மக்கா வெற்றிக்கு முன் இஸ்லாத்தை ஏற்றார். உஹுத் யுத்தத்தில் இணைவைப்பாளர் படையிலிருந்த இவர் பின்னர் இஸ்லாத்தைத் தழுவினார். இந்த வகையில் இதில் அல்லாஹ்வின் வல்லமைக்கான முழு ஆதாரம் உள்ளது. அவனின் கையில் முழு அதிகாரமும் காணப்படுகிறது. அவன் நாடியோருக்கு நேரான பாதைக்கு வழிகாட்டுவதுடன் அவன் நாடியோரை அப்பாக்கியத்தை வழங்குவதில்லை. காலித் (ரழி) அவர்கள் முஃதா தினத்தன்று தனது கையினால் பல வாள்கள் உடைந்தது குறித்து தெரிவிக்கிறார்கள். இது அவரின்வீரத்தை சுட்டிக்காட்டுகிறது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் ஹவுஸா
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு