عن عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ:
«مَنْ جَاءَ مِنْكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 894]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
உங்களில் யாராவது ஜும்ஆவுக்காக வருவதாக இருந்தால், குளித்துக்கொள்ளட்டும்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 894]
யாராவது ஜும்ஆத் தொழுகைக்காக வர நாடினால், கடமையான குளிப்பைப் போல குளித்துக்கொள்வது அவருக்கு ஸுன்னாவாகும் என்பதை நபியவர்கள் இங்கு உறுதிப் படுத்துகின்றார்கள்