ஹதீஸ் அட்டவணை

'வெள்ளிக்கிழமை தினத்தில் இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ 'மௌனமாக இரு' என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்'. (ஜும்ஆவின் பலனை இழந்துவிட்டாய்)
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளிக்கிழமை அன்று குளித்துவிட்டுப் பள்ளிவாசலுக்கு (நேரத் தோடு) செல்பவர், ஓர் ஒட்டகத்தை 'குர்பானி' கொடுத்தவரைப் போன்றவர் ஆவார்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
உங்களில் யாராவது ஜும்ஆவுக்காக வருவதாக இருந்தால், குளித்துக்கொள்ளட்டும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'(வெள்ளிக்கிழமை) யார் வுழு செய்து அதனை அழகிய முறையில் செய்து, பின் ஜும்ஆவிற்கு வருகை தந்து (இமாமின் உரையை) குத்பாவை செவிதாழ்த்தி மௌனமாக கேட்கிறாரோ அவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரைக்கும் செய்த (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படுவதோடு மேலதிகமாக மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நான் நபி (ஸல்)அவர்களுடன் ஐவேளை தொழுதிருக்கிறேன். அவர்களின் தொழுகை நடு நிலையாகவே இருந்தது. அவரின் குத்பா நடு நிலையாகவே இருந்தது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது