عَن عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَاءِ وَمَا يَنُوبُهُ مِنَ الدَّوَابِّ وَالسِّبَاعِ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ».
[صحيح] - [رواه أبو داود والترمذي والنسائي وابن ماجه وأحمد] - [سنن أبي داود: 63]
المزيــد ...
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்களிடம் நீரைப் பற்றியும், அவற்றில் பிராணிகளும், மிருகங்களும் நீர் அருந்திவிட்டுச் செல்வது பற்றியும் கேட்கப்பட்டது. அப்போது நபியவர்கள், பின்வருமாறு கூறினார்கள் :
'நீர் 'குல்லதைன்' அளவை எட்டிவிட்டால், அது அழுக்குகளை சுமக்கமாட்டாது.'
[ஸஹீஹானது-சரியானது] - [رواه أبو داود والترمذي والنسائي وابن ماجه وأحمد] - [سنن أبي داود - 63]
விலங்குகளும், மிருகங்களும் அருந்திவிட்டுச் செல்லும் நீரின் சுத்தநிலை பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது நபியவர்கள், 'அதன் கொள்ளளவு, இரு பீப்பாய்கள், அதாவது, 210 லீட்டர்கள் அளவு இருந்தால், அது அதிகமான நீராகும். அது அசுத்தமாகமாட்டாது. ஏதாவது ஒரு அசுத்ததைக் கொண்டு, அதனுடைய நிறம் அல்லது வாடை அல்லது சுவை ஆகிய தன்மைகள் மாற்றமடைந்தாலே தவிர.