عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضيَ اللهُ عنهما قَالَ:
رَجَعْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ حَتَّى إِذَا كُنَّا بِمَاءٍ بِالطَّرِيقِ تَعَجَّلَ قَوْمٌ عِنْدَ الْعَصْرِ، فَتَوَضَّؤُوا وَهُمْ عِجَالٌ، فَانْتَهَيْنَا إِلَيْهِمْ وَأَعْقَابُهُمْ تَلُوحُ لَمْ يَمَسَّهَا الْمَاءُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ أَسْبِغُوا الْوُضُوءَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 241]
المزيــد ...
அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். பாதையில் உள்ள ஒரு நீர் நிலைக்கு நாங்கள் வந்து சேர்ந்த போது சிலர் அஸ்ர் தொழுகைக்காக அவசரப்பட்டனர். (அதற்காக) அவசர அவசரமாக வுழு செய்தனர். நாங்கள் அவர்களிடம் போய்ச் சேர்ந்த போது அவர்களுடைய குதிகால்களில் தண்ணீர் படாமல் தெளிவாக அவை காட்சியளித்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான் உண்டு. ஆகவே வுழுவை பரிபூரணமாகச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 241]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்கள். அவர்களுடன் சில ஸஹாபாக்களும் இருந்தனர். செல்லும் வழியில் நீர் கிடைத்தது அதனால் சில ஸஹாபக்கள் -நபித்தோழர்கள்-அஸ்ர் தொழுவதற்காக வுழு செய்ய விரைந்தனர். அவசரமாக வுழு செய்ததால் அவர்களின் குதிகால் பகுதிகள் நீர்படாது காய்ந்து காணப்பட்டது தெளிவாக புலப்பட்டது. அவ்வேளை நபியவர்கள் : வுழுவின் போது பாதத்தின் பிற்பகுதியை ஒழுங்காக கழுவாது அலட்சியமாய் இருப்போருக்கு நரகில் வேதனையும் நாசமும் உண்டாகட்டும் எனக் குறிப்பிட்டு விட்டு, வுழுவை பரிபூரணமாக செய்யுமாறு கட்டளைப் பிரப்பித்தார்கள்.