عَنْ أَبِي ثَعْلَبَةَ الخُشَنِيِّ جُرْثُومِ بن نَاشِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَال:
«إِنَّ اللَّهَ فَرَضَ فَرَائِضَ فَلَا تُضَيِّعُوهَا، وَحَدَّ حُدُودًا فَلَا تَعْتَدُوهَا، وَحَرَّمَ أَشْيَاءَ فَلَا تَنْتَهِكُوهَا، وَسَكَتَ عَنْ أَشْيَاءَ رَحْمَةً لَكُمْ غَيْرَ نِسْيَانٍ فَلَا تَبْحَثُوا عَنْهَا».
[قال النووي: حديث حسن] - [رواه الدارقطني في سننه، وغيره] - [الأربعون النووية: 30]
المزيــد ...
அபூஸஃலபா அல் குஷனீ ஜுர்ஸூம் இப்னு நாஷிர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்; ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் :
'எல்லாம் வல்ல அல்லாஹ் சில மார்க்கக் கடமைகளை விதித்திருக்கின்றான். ஆகவே அவைகளை வீணடிக்காதீர்கள்; அவன் சில எல்லைகளை நிர்ணயித்திருக்கின்றான். ஆகவே அவற்றைக் கடந்து செல்லாதீர்கள். அவன் நமக்கு சிலவற்றை தடை செய்திருக்கின்றான். ஆகவே அவற்றை மீறிச்செல்லாதீர்கள்; சில விஷயங்களில் மறதியாக அன்றி,உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக அவன் மௌனமாக இருக்கின்றான். ஆகவே அவற்றைக் குறித்து தேட வேண்டாம்.
[قال النووي: حديث حسن] - [رواه الدارقطني في سننه وغيره] - [الأربعون النووية - 30]
அல்லாஹ் சில விடயங்களை கடமையாக்கி அதனை கட்டாயப்படுத்தியுள்ளான். எனவே அவற்றைப் பின்பற்றுங்கள். அவற்றை பின்பற்றாது அலட்சியமாக இருப்பதன் மூலம் அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். அதே போன்று சில தடைகளை விதித்துள்ளான் அவை அல்லாஹ் விரும்பாதவைகளை விட்டும் உங்களை தடுக்கும். அதனால் இஸ்லாமிய ஷரீஆ வலியுறுத்தியதற்கு அப்பால் எதனையும் அதிகப்படுத்துவிடாதீர்கள் என்றும், அல்லாஹ் சில விடயங்களை தடைசெய்துள்ளான் அதனை செய்யவோ அதன் அருகே நெருங்கவோ வேண்டாம். இவை தவிர உள்ளவை யாவும் அல்லாஹ் தனது அடியார்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக அது குறித்து ஏதும் பேசாது விட்டுவிட்டான். எனவே அவை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதாகும் ஆகையால் அவற்றை தேட வேண்டாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.