عن أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال:
«مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ فَلَيْسَ مِنَّا».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 7071]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
யார் எமக்கெதிராக ஆயுதமேந்துகிறாரோ அவர் எம்மைச் சார்ந்தவரல்லர்'
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 7071]
முஸ்லிம்களை அச்சுருத்தி அவர்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்காக முஸ்லிம்களுக்கெதிராக ஆயுதமேந்துவதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரிக்கிறார்கள். யார் ஒருவர் எவ்வித நியாயமான காரணங்கள் ஏதுமின்றி இவ்வாறு செய்கிறானோ அவன் பெரும்பாவங்களில் ஒன்றை செய்தவனாவான். அவன் இந்த எச்சரிக்கைக்கு தகுதியானவனாக மாறி விடுகிறான்.