عَنْ ابنِ عُمَرَ رَضيَ اللهُ عنهما عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنِ اقْتَنَى كَلْبًا إِلَّا كَلْبَ ضَارٍ أَوْ مَاشِيَةٍ نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ»، قَالَ سَالِمٌ: وَكَانَ أَبُو هُرَيْرَةَ يَقُولُ: «أَوْ كَلْبَ حَرْثٍ»، وَكَانَ صَاحِبَ حَرْثٍ.
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1574]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
'யாராவது, வேட்டை நாய், அல்லது காவல் நாய் ஆகியவையல்லாத வேறு நாய்களை வைத்துக் கொண்டிருந்தால், அவரது அமல்களில் இருந்து ஒவ்வொரு நாளும் இரு கீராத்கள் அளவு குறையும். ஸாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் (அல்லது பயிர்நிலங்களைப் பாதுகாக்கும் நாய்) என்றும் இணைத்துக் கூறுவார்கள். அவர்கள் விவசாயம் செய்யும் ஒருவராகக் காணப்பட்டார்கள்.
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم - 1574]
இங்கு நபியவர்கள், வேட்டையாடல், கால்நடைகள் மற்றும் மற்றும் பயிர்களைப் பாதுகாத்தல் போன்ற தேவைகளுக்காகவே அன்றி, நாய்களை வைத்துக் கொண்டிருப்பதை எச்சரிக்கின்றார்கள். வேறு காரணங்களுக்காக யாராவது வைத்துக் கொண்டிருந்தால், அவருடைய நற்கருமங்களின் கூலியில் இருந்து தினமும் இரண்டு கீராத்கள் குறையும் என்றும் கூறுகின்றார்கள். இது அல்லாஹ்விடம் (மாத்திரம்) அறியப்பட்டுள்ள ஒரு அளவாகும்.