عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنهما عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«مَثَلُ الْمُنَافِقِ، كَمَثَلِ الشَّاةِ الْعَائِرَةِ بَيْنَ الْغَنَمَيْنِ تَعِيرُ إِلَى هَذِهِ مَرَّةً وَإِلَى هَذِهِ مَرَّةً».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2784]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து இப்னு உமர் ரழியல்லாஹூ அன்ஹுமா அறிவிக்கிறார்கள்:
நயவஞ்சகனின் நிலை இரு ஆண் ஆடுகளை சுற்றிவரும் பெண் ஆட்டின் நிலையைப் போன்றதாகும். ஒரு முறை அதனிடம் செல்கிறது; மறுமுறை வேறு ஒன்றிடம் செல்கிறது.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2784]
நயவஞ்சகனின் நிலை இரண்டு ஆட்டுமந்தைகளில் எதனைப் பின்பற்றிச் செல்வது என்ற தடுமாற்றத்துடன் இருக்கும் ஆட்டை ஒத்ததாகும் என நபியவர்கள் இங்கு தெளிவு படுத்துகிறார்கள் ஒருமுறை இந்த ஆட்டுமந்தையிடமும் மறுமுறை வேறொன்றிடமும் செல்கின்றது. முனாபிகுகள்; -நயவஞ்சகர்கள்- ஈமான் மற்றும் குப்ருக்கு மத்தியில் தடுமாற்றுத்துடன் இருப்போர. இவர்கள் முஃமின்களுடன் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தெளிவான முறையில் நடந்து கொள்வதில்லை மற்றும் காபிர்களுடனும் கூட வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ நடந்து கொள்வதில்லை. மாறாக இவர்கள் வெளிப்படையில் முஃமின்களுடன் இருப்பதாக போலியாக காட்டிக்கொண்டாலும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு சாராரையும் திருப்தி படுத்த முனைவதால் அவர்கள் மனதினுள்ளே சந்தேகம் மற்றும் தடுமாற்றத்துடனனே காணப்படுவார்கள்.