عَنْ أَبِي هُرَيْرَةَ رَضيَ اللهُ عنهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«انْظُرُوا إِلَى مَنْ أَسْفَلَ مِنْكُمْ، وَلَا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ، فَهُوَ أَجْدَرُ أَلَّا تَزْدَرُوا نِعْمَةَ اللهِ عَلَيْكُمْ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 2963]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
உங்களுக்குக் கீழால் உள்ளவர்களைப் பாருங்கள். உங்களுக்கு மேலால் உள்ளவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே, அல்லாஹ் உங்களுக்குச் செய்துள்ள அருள்களை அற்பமாகக் கருதாமல் இருக்கப் பொருத்தமானதாகும்.
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم - 2963]
இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் உலக விவகாரங்களான, பதவி, அந்தஸ்த்து, பணம் போன்றவற்றில் அவனை விடத் தாழ்ந்த, குறைந்த நிலையில் உள்ளவர்களைப் பார்க்குமாறும், அவ்வாறான உலக விடங்களில் தன்னை விட மேலுள்ள, சிறந்த நிலையில் உள்ளவர்களைப் பார்க்கவேண்டாம் எனவும் ஏவுகின்றார்கள். ஏனெனில் அவன் அவ்வாறு தனக்குக் கீழால் இருப்பவர்களைப் பார்ப்பதுவே, அல்லாஹ் தனக்குச் செய்துள்ள அருள்களை அற்பமாகக் கருதாமல் இருக்கப் பொருத்தமானதாகும்.