عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«بَدَأَ الْإِسْلَامُ غَرِيبًا، وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا، فَطُوبَى لِلْغُرَبَاءِ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 145]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இஸ்லாம் ஆதரவற்றதாகவே ஆரம்பித்தது. அவ்வாறு ஆரம்பித்தது போன்றே, ஆதரவற்ற நிலைக்கே அது இறுதியில் சென்றடையும். ஆதரவற்ற நிலையிலும் அதை நடைமுறைப்படுத்தும் 'குரபா'க்களுக்கு சுபசோபனம் உண்டாகட்டும்.

[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 145]

விளக்கம்

இங்கு நபியவர்கள் கூறுவதாவது, இஸ்லாம் சில தனிநபர்கள் மாத்திரம் இருக்க, ஏற்றுக் கொண்டவர்கள் குறைவாக இருக்கும் நிலையில் ஆதரவற்ற ஒன்றாகவே ஆரம்பித்தது. அவ்வாறு ஆரம்பித்தது போன்றே, நடைமுறைப் படுத்துபவர்கள் குறைவடைந்து, ஆதரவற்ற நிலைக்கே அது மீண்டும் செல்லும். ஆதரவற்ற நிலையிலும் அதை நடைமுறைப்படுத்தும் 'குரபா'க்களுக்கு சுபசோபனமும், மகிழ்ச்சியும், கண்குளிர்ச்சியும் உண்டாகட்டும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இஸ்லாம் பரவி, பிரபல்யமடைந்த பின்னரும், அந்நியப்பட்ட நிலையை அடையும் என்பதை அறிவித்தல்.
  2. இதில் நபித்துவ அடையாளங்களில் ஒரு அடையாளம் உள்ளது. அதாவது, நபியவர்கள் தமக்கு பின்னர் நடக்கும் ஒன்றைப் பற்றிக் கூறினார்கள். அவர்கள் கூறிய பிரகாரமே நடந்துள்ளது.
  3. இஸ்லாத்திற்காக தனது நாட்டையும், குடும்பத்தையும் விட்டுச் செல்வதன் சிறப்பு. மேலும் அவருக்கு சுவனம் உள்ளமை.
  4. குரபா என்போர், மக்கள் சீர்கெட்டுச் செல்லும் போது சீர்த்திருத்துபவர்கள். அதாவது, மக்கள் சீர்க்கெடுத்துள்ளவற்றை சீர்த்திருத்துபவர்களாகும்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு இந்தோனேஷியன் வங்காள மொழி துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية الرومانية المجرية الموري Малагашӣ الولوف الأوكرانية الجورجية المقدونية الخميرية البنجابية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு