عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِحْصَنٍ الْأَنْصَارِيِّ رَضيَ اللهُ عنهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ أَصْبَحَ مِنْكُمْ مُعَافى فِي جَسَدِهِ، آمِنًا فِي سِرْبِهِ، عِنْدَهُ قُوتُ يَوْمِهِ، فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا».
[حسن] - [رواه الترمذي وابن ماجه] - [سنن ابن ماجه: 4141]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, உபைதுல்லாஹ் இப்னுல் மிஹ்ஸன் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
உங்களில் யாராவது, உடலில் ஆரோக்கியத்துடனும், தன் வீடு மற்றும் குடும்பத்தில் பாதுகாப்புடனும், அன்றைய தினத்துக்கு அவசியமான உணவு கையில் இருக்கும் நிலையிலும் காலைப் பொழுதை அடைகின்றாரோ, அவர் முழு உலகமும் வழங்கப்பட்டதைப் போன்றவர் ஆகும்.
[حسن] - [رواه الترمذي وابن ماجه] - [سنن ابن ماجه - 4141]
இங்கு நபியவர்கள், முஸ்லிம்களே! உங்களில் யாராவது, உடலில் நோய்கள் அற்று ஆரோக்கியத்துடனும், தன்னிலும், தனது குடும்பம் மற்றும் தான் செல்லும் பாதைகளிலும் அச்சமற்று பாதுகாப்புடனும், அன்றைய தினத்துக்கு அவசியமான ஹலாலான உணவு கையில் இருக்கும் நிலையிலும் காலைப் பொழுதை அடைகின்றாரோ, அவர் முழு உலகமும் வழங்கப்பட்டதைப் போன்றவர் என்று அறிவிக்கின்றார்கள்.