+ -

عَنْ ‌عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ:
تَلَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الْآيَةَ: {هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ، وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ، وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ} [آل عمران: 7]. قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِذَا رَأَيْتِ الَّذِينَ يَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ فَأُولَئِكَ الَّذِينَ سَمَّى اللهُ، فَاحْذَرُوهُمْ».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 4547]
المزيــد ...

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆல இம்ரான் ஸுறாவின் 7வது வசனமான ' ஹுவல்லலதி அன்ஸல அலைக்கல் கிதாப..' என்ற வசனத்தை ஒதினார்கள் (கருத்து: அவன்தான் உம்மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான் அதில் கருத்துத் தெளிவுள்ள)முஹ்கமாத் வசனங்களும் உள்ளன.அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றும் சில (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) முதஷாபிஹாத்களாகும். எவர்களின் உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை நாடியும் இதன் தவறான விளக்கத்தை தேடியும் அதில் பலகருத்துக்களுக்கு இடம்பாடானவற்றை பின்பற்றுகின்றனர். அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ 'நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண்டோம் அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துமுள்ளவையே என்று கூறுவார்கள் சிந்தனையுடையோரைத்தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.'(ஆலு இம்ரான் 7) (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) முதஷாபிஹாத்களை பின்பற்றுபவர்களை நீங்கள் கண்டால் அவர்களையே அல்லாஹ் உள்ளத்தில் கோளாறு உள்ளோர் எனப்பெயரிட்டுள்ளான் ஆகவே அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பீராக என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழி ) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 4547]

விளக்கம்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆலு இம்ரான் ஸுறாவின் 7 வசனமான ' ஹுவல்லலதி அன்ஸல அலைக்கல் கிதாப..' என்ற வசனத்தை ஒதினார்கள் (கருத்து: அவன்தான் உம்மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான் அதில் கருத்துத் தெளிவுள்ள)முஹ்கமாத் வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றும் சில (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) முதஷாபிஹாத்களாகும். எவர்களின் உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை நாடியும் இதன் தவறான விளக்கத்தை தேடியும் அதில் பலகருத்துக்களுக்கு இடம்பாடானவற்றை பின்பற்றுகின்றனர். அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ 'நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண்டோம் அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துமுள்ளவையே என்று கூறுவார்கள் சிந்தனையுடையோரைத்தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.'(ஆலு இம்ரான் 7) இந்த வசனத்தில் அல்லாஹ் தனது நபிக்கு அல்குர்ஆனை இறக்கியதாகவும்,அதில் தெளிவான ஆதாரங்களும், எந்த மூடலுமில்லாத –சிக்கலுமில்லாத சட்டதிட்டங்களும் உள்ளதாகவும், இதுவே இவ்வேதத்தின் அடிப்படையாகவும் மூலாதாரமாகவும் சர்ச்சைகள் சிக்கல்களின் போது இதுவே மூலாதாரமாக இருக்கும் என்பதாகவும் அல்லாஹ் குறிப்பிடுகிறான். என்றாலும் பல கருத்துக்களைகொள்வதற் இடம்பாடான சில வசனங்கள் இவ்வேதத்தில் உண்டு. சிலர் அவ்வாறான வசனங்களின் கருத்துக்களை புரிந்து கொள்வதில் குழப்பத்தில் இருப்பர். இன்னும் சிலரோ குறிப்பிட்ட வசனத்திற்கும் ஏனைய வசனங்களுக்கும் மத்தியில் முரண்பாடு உள்ளதாக நினைப்பர். பின்னர் அல்லாஹ் இவ்வாறான இந்த வசனங்களில் மக்கள் நடந்து கொள்ளும் முறை பற்றி விவரிக்கிறான். உள்ளத்தில் கோளாறுடன் சத்தியத்தை விட்டு விலகி இருப்போர் தெளிவான வசனங்களைவிட்டுவிட்டு இவ்வாறு முதஷாபிஹான வசனங்களை பின்பற்றுவர் இதனூடாக சந்தேகங்களை ஏற்படுத்தி மக்களை வழிகெடுப்பதோடு தங்களின் மனோ இச்சைப்பிரகாரம் அதற்கு வியாக்கியானம் அளிப்பர். ஆனால் அறிவில் தேர்ச்சிபெற்றோர் முதஷாபிஹான வசனங்களை அறிந்திருப்பர் அவற்றை முஹ்கமான வசனங்களோடு ஒப்புநோக்கிபார்ப்பார்ப்பர். இது அல்லாஹ்விடமிருந்து வந்தவை என்பதை உறுதியாக விசுவாசிப்பர் ஆகையால் சிக்கலோ முரண்பாடோ இருக்காது என்பதை நம்புவதோடு இதிலிருந்து படிப்பினை பெருவர்.சீரிய அறிவு படைத்தோரைத் தவிர மற்றவர்கள் படிப்பினை பெற மாட்டார்கள். பின்னர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவரகள் ஆஇஷா ரழியல்லாஹு அவர்களிடம் முதஷாபிஹான வசனங்களை பின்பற்றுவோரை நீங்கள் கண்டால் அவர்களையே அல்லாஹ் உள்ளத்தில் கோளாறு உள்ளோர் என்று பெயரிட்டுக் குறிப்பிட்டுள்ளான்.எனவே அவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதோடு அவர்களின் கூற்றுக்களுக்கு செவிசாய்த்திட வேண்டாம் எனவும் கூறினார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்குர்ஆன் வசனங்களில் முஹ்கம் என்பது : கருத்தும் ஆதாரமும் தெளிவானவை. முதஷாபிஃ என்பது பல கருத்துக்களுக்கு இடம்பாடானவை. இதனை விளங்க அவதானம் மற்றும் புரிதல் போன்றன தேவைப்படும்
  2. வழிகேடர்கள் பித்அத்வாதிகள்,மக்களை வழிகெடுத்து சந்தேகங்களை ஏற்படுத்துவோரோடு சகவாசம் கொள்வதை விட்டு எச்சரித்தல்.
  3. இந்த வசனத்தின் இறுதியில் அல்லாஹ் 'சிந்தனையுடையோரைத்தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள் என்று குறிப்பிடுவது தடம்புரண்டோரை மறைமுகமாக சாடுவதாகவும்,அறிவில் தேர்ச்சி பெற்றோரை புகழ்வதாகவும் உள்ளது. யார் சிந்தித்து படிப்பினை பெறாது மனோ இச்சையை பின்பற்றி நடக்கிறாரோ அவர் சிந்திக்கத்தெரிந்தோர் அல்ல என்பதே இதன் கருத்தாகும்.
  4. முதஷாபிகானவற்றை பின்பற்றுதல் உள்ளம் தடம்பிரழ்வதற்கான காரணமாகும்.
  5. புரிந்து கொள்வது அல்லது விளங்குவது சிரமம் என்றிருக்கும் முதஷாபிஹான வசனங்களை முஹ்கமான தெளிவான வசனங்களுடன் ஒப்பிட்டு தெளிவு பெறுவது கடமையாகும்.
  6. முஃமின்கள் மற்றும் வழிதவறியோரை வேறுபடுத்தும் முகமாக மக்களை சோதிப்பதற்காக அல்குர்ஆனில் சில வசனங்களை முஹ்கமாகவும் சிலதை முதஷாபிஹாஹவும் அல்லாஹ் வைத்துள்ளான்.
  7. ஏனையோரை விட அறிஞர்களின் சிறப்பை எடுத்துக்காட்டவும் பகுத்தறிவு குறையுடையது என்ற குறையை தெரியப்படுத்துவதும் அல்குர்ஆனில் முதஷாபிஹை வைத்திருப்பதன் நோக்கமாகும். இதன் மூலம் அறிவானது படைப்பாளனான அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்பட்டு அதன் இயலாமையை ஏற்றுக்கொள்கிறது.
  8. அறிவில் தேர்ச்சி பெறுவதன் சிறப்பும்,அதில் உறுதியாக இருப்பதன் அவசியமும்
  9. (வமா யஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு வர்ராஸிகூன பிஃல் இல்மி) இந்த வசனத்தில் அல்லாஹ் என்ற இடத்தில் நிறுத்தி ஓதினால் இந்த வசனத்திற்கு ' ரூஹ்(உயிர்) மறுமை நாள் போன்ற விவகாரங்களைப்போல் அதன் யதார்த்தமான விளக்கத்தை அல்லாஹ் மாத்திரமே பிரத்தியேகமாக அறிந்துள்ளான்.அறிவில் தேர்ச்சி பெற்றோர் அதனை ஈமான் கொண்டு அதன் யதார்தங்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்து தங்களை அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வார்கள். இந்த வசனத்தை அல்லாஹ்' என்ற வார்த்தையில் நிறுத்தாது ஒதினால் வசனத்தில் இடம்பெற்ற தஃவீல் என்பதற்கு விளக்கம் தெளிவு பொருள் கொள்ளல் வேண்டும். இந்த அடிப்படையில் அல்லாஹ்வும் அறிவில் தேர்ச்சிபெற்றோரும் முதஷாபிஹாத் பற்றி அறிவார்கள் ஆனால் அறிவில் தேர்ச்சி பெற்றோர் முதஷாபிகான வசனத்தை முஹ்கமான வசனத்துடன் ஓப்நோக்கி தீர்வு காண்பர் என்பது இதன் விளக்கமாகும்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الطاجيكية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ الفولانية Итолёвӣ Урумӣ Канада الولوف البلغارية Озарӣ اليونانية الأوزبكية الأوكرانية الجورجية المقدونية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு