‌عن عَلِيٍّ قَالَ: إِنِّي كُنْتُ رَجُلًا إِذَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا نَفَعَنِي اللهُ مِنْهُ بِمَا شَاءَ أَنْ يَنْفَعَنِي بِهِ، وَإِذَا حَدَّثَنِي رَجُلٌ مِنْ أَصْحَابِهِ اسْتَحْلَفْتُهُ، فَإِذَا حَلَفَ لِي صَدَّقْتُهُ، وَإِنَّهُ حَدَّثَنِي ‌أَبُو بَكْرٍ، وَصَدَقَ أَبُو بَكْرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَا مِنْ رَجُلٍ يُذْنِبُ ذَنْبًا، ثُمَّ يَقُومُ فَيَتَطَهَّرُ، ثُمَّ يُصَلِّي، ثُمَّ يَسْتَغْفِرُ اللهَ، إِلَّا غَفَرَ اللهُ لَهُ»، ثُمَّ قَرَأَ هَذِهِ الْآيَةَ: {وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ} [آل عمران: 135].

[صحيح] - [رواه أبو داود والترمذي والنسائي في الكبرى وابن ماجه وأحمد]
المزيــد ...

அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை செவியேற்றால், அல்லாஹ் எனக்கு எவ்வளவு நன்மை விளைவிக்கிறானோ அந்த அளவிற்கு அதன் மூலம் நான் பயனடைகிறேன்;. நபித் தோழர்களில் ஒருவர் என்னிடம் ஹதீஸ்களைக் கூறினால், நான் அவரிடம் சத்தியம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்,அவர் சத்தியம் செய்தால், நான் அவரை நம்புகிறேன். பின்வரும் இந்த ஹதீஸை அபூபக்ர் கூறினார்- அபூபக்ர் உண்மையைச் சொன்னார்; அவர் தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: என்று கூறினார்:
ஒரு அடியான் பாவமொன்றை செய்து விட்டு அழகிய முறையில் வுழூசெய்து பின் எழுந்து தனது பாவத்திலிருந்திருந்து மீளும் நோக்கில் இரண்டு ரக்அத்துக்களை தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அவனை அல்லாஹ் மன்னிக்காது விட்டுவிடுவதில்லை பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆல இம்ரானின் 135 வசனத்தை ஓதிக்காட்டினார்கள் "மேலும் அவர்கள் மானக்கேடான காரியத்தை செய்துவிட்டாலோ அல்லாது தங்களுக்கு தாங்களே அநியாயம் இழைத்துக்கொண்டாலோ அல்லாஹ்வை நினைவுகூர்ந்து உடனே தங்ளது பாவங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள்

ஸஹீஹானது-சரியானது - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

ஒரு அடியான் பாவமொன்றை செய்து விட்டு அழகிய முறையில் வுழூசெய்து பின் எழுந்து தனது பாவத்திலிருந்திருந்து மீளும் நோக்கில் இரண்டு ரக்அத்துக்களை தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அவனை அல்லாஹ் மன்னிக்காது விட்டுவிடுவதில்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்டினார்கள் மேலும் அவர்கள் மானக்கேடான காரியத்தை செய்துவிட்டாலோ அல்லாது தங்களுக்கு தாங்களே அநியாயம் இழைத்துக்கொண்டாலோ அல்லாஹ்வை நினைவுகூர்ந்து உடனே தங்ளது பாவங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள் .பாவத்தை மன்னிப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யார்தான் இருக்க முடியும்.அவர்கள் அறிந்து கொண்டே பாவங்களில் -தவறில் நிலைத்திருக்கமாட்டார்கள். (ஆல இம்ரான் : 135).

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு உருது இந்தோனேஷியன் போஸ்னியன் சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா மலயாளம் ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து بشتو الأسامية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பாவத்தை செய்ததன்பின் தொழுது பாவமன்னிப்புக் கோருமாறு வலியுறுத்தியுள்ளமை.
  2. அல்லாஹ்வின் பாவமன்னிப்பின் விசாலமும், தவ்பாவை அவன் ஏற்பதில் அவனது பெருந்தன்மையும் புலப்படுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு