عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ فَيَقُولُ: يَا لَيْتَنِي مَكَانَهُ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 7115]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, 'அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 7115]
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் மண்ணறையை கடந்து செல்கையில் தான் அவன் இருக்கும் இடத்தில் இருந்திருக்க வேண்டுமே என்று நினைக்கும் வரையில் மறுமை ஏற்பட மாட்டாது. அசத்தியமும் அசத்திய வாதிகளும் மிகைத்ததின் விளைவாக மரர்க்கம் தன்னை விட்டு சென்றுவிடும் என்ற பயமும், குழப்பங்கள் பாவகாரியங்கள் மானக்கேடான விடயங்கள் அதிகரித்து மிகைத்திருப்பதுமே இவ்வாறு நினைப்பதற்கு காரணம் என குறிப்பிடுகிறார்கள்.