عَن هَانِئ مَوْلَى عُثْمَانَ رَضيَ اللهُ عنهُ قَالَ: كَانَ عُثْمَانُ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ، فَقِيلَ لَهُ: تُذْكَرُ الْجَنَّةُ وَالنَّارُ فَلَا تَبْكِي، وَتَبْكِي مِنْ هَذَا؟ فَقَالَ: إِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ:
«إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنْزِلٍ مِنْ مَنَازِلِ الْآخِرَةِ، فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ، وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ».
[حسن] - [رواه الترمذي وابن ماجه] - [سنن الترمذي: 2308]
المزيــد ...
உஸ்மான் (ரலி) அவர்களது அடிமையாக இருந்த, ஹானிஃ அவர்கள் கூறுகின்றார்கள் : உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு கப்ருக்கு முன்னால் நின்று விட்டால், தமது தாடி நனையும் வரை அழுவார்கள். அப்போது அவரிடம், சுவனம் மற்றும் நரகம் பற்றிக் கூறப்படும் போது அழமாட்டீர்கள். ஆனால், இதற்காக அழுகின்றீர்களே? எனக் கேட்கப்பட்ட போது, நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நிச்சயமாக மண்ணறைதான் மறுமையின் படித்தரங்களில் முதலாவது படித்தரமாகும். அதில் தப்பிவிட்டார் என்றால், அதற்குப் பின்னால் உள்ளது அதை விட இலகுவாக இருக்கும். அதிலிருந்து தப்பா விட்டால், அதற்குப் பின்னால் உள்ளது அதை விடக் கடினமாக இருக்கும்.
[நம்பகமானது (ஹஸன்)] - [இமாம் திர்மிதி, இமாம் இப்னு மாஜா ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது] - [ஸுனன் திர்மிதீ - 2308]
உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு கப்ருக்கு முன்னால் நின்றுவிட்டால், தமது கண்ணீரினால் தாடி நனையும் வரை அழுவார்கள். அப்போது அவரிடம், சுவனம் மற்றும் நரகம் பற்றிக் கூறப்படும் போது, சுவர்க்கத்திற்கு ஆசைப்பட்டோ, நரகைப் பயந்தோ அழமாட்டீர்கள். ஆனால், மண்ணறையைப் பார்த்து அழுகின்றீர்களே? எனக் கேட்கப்பட்ட போது, நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நிச்சயமாக மண்ணறைதான் மறுமையின் படித்தரங்களில் முதலாவது படித்தரமாகும். அதில் தப்பிவிட்டார் என்றால், அதற்குப் பின்னால் உள்ள படித்தரங்கள் அதை விட இலகுவாக இருக்கும். அதிலிருந்து தப்பா விட்டால், அதற்குப் பின்னால் உள்ள தண்டனைகள் அதை விடக் கடினமாக இருக்கும்.