عن تَميم الداري رضي الله عنه، قال: سمعتُ رسول الله صلى الله عليه وسلم يقول:
«لَيَبْلُغَنَّ هَذَا الأَمْرُ مَا بَلَغَ اللَّيْلُ وَالنَّهَارُ، وَلَا يَتْرُكُ اللهُ بَيْتَ مَدَرٍ وَلَا وَبَرٍ إِلَّا أَدْخَلَهُ اللهُ هَذَا الدِّينَ، بِعِزِّ عَزِيزٍ أَوْ بِذُلِّ ذَلِيلٍ، عِزًّا يُعِزُّ اللهُ بِهِ الإِسْلَامَ، وَذُلًّا يُذِلُّ اللهُ بِهِ الكُفْرَ» وَكَانَ تَمِيمٌ الدَّارِيُّ يَقُولُ: قَدْ عَرَفْتُ ذَلِكَ فِي أَهْلِ بَيْتِي، لَقَدْ أَصَابَ مَنْ أَسْلَمَ مِنْهُمُ الْخَيْرُ وَالشَّرَفُ وَالْعِزُّ، وَلَقَدْ أَصَابَ مَنْ كَانَ مِنْهُمْ كَافِرًا الذُّلُّ وَالصَّغَارُ وَالْجِزْيَةُ.
[صحيح] - [رواه أحمد] - [مسند أحمد: 16957]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதைக் தான் கேட்டதாக தமீமுத்தாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'இந்த மார்க்கம் இரவு பகல் சென்றடையும் இடமெல்லாம் சென்றடையும்;. அல்லாஹ் இந்த மார்க்கத்தை நகரத்தில் மற்றும் கிராமத்தில் உள்ள எந்த வீட்டையும் சென்றடையாது விட்டுவிட மாட்டான்.ஆகவே இந்த மார்க்த்தை ஏற்றுக்கொன்றவனை கௌரவப்படுத்துவான் அல்லது இதனை ஏற்றுக்கொள்ளாதவனை இழிவுபடுத்துவான் . அதாவது இஸ்லாத்தின் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவனை கண்ணியப்படுத்துவான், இஸ்லாத்தை நிராகரித்தவனை இழிவு படுத்துவான். இது குறித்து தமீமுத்தாரி அவர்கள் குறிப்பிடுகையில் நான் இதனை எனது குடும்பத்தவரில் கண்டேன். யார் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனரோ அவர்களுக்கு பாக்கியமும் கௌரவமும் கண்ணியமும் கிடைத்தது. யார் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர்களுக்கு அவமானமும் இழிவும் ஏற்பட்டது. அவர்கள் ஜிஸ்யா செலுத்துவோராக இருந்தனர்.'
[ஸஹீஹானது-சரியானது] - [இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்] - [مسند أحمد - 16957]
இந்த மார்க்கம் உலகின் எல்லாப்பகுதியை உள்ளடக்கி பரவும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது இரவும் பகலும் அடையும் இடமெல்லாம் இம்மார்க்கம் சென்றடையும். அல்லாஹ் இந்த மார்க்கத்தை நகரங்கள்,கிராமங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் பாலை நிலங்களில் உள்ள எல்லா வீடுகளிலும் நிச்சயம் நுழைவிப்பான். ஆகவே யார் இந்த மார்க்கத்தை ஏற்று விசுவாசம் கொள்கிறாறோ அவர் இஸ்லாத்தின் கண்ணியத்தால் கண்ணியமிக்கவராய் இருப்பார். யார் இந்த மார்க்கத்தை மறுத்து விசுவாசம் கொள்ளாதவராக இருப்பாரோ அவர் இழிவும் அவமானமும் பெற்றவராக விளங்குவார்.
தொடர்ந்தும் நபித்தோழரான தமீமுத் தாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்கள் அறிவித்த இந்த செய்தியை தனது குடும்பத்தில் நேரில் கண்டதாக தெரிவிக்கிறார்கள். அதாவது யார் இஸ்லாத்தை ஏற்றுகொண்டாரோ அவருக்கு நற்பாக்கியமும் கண்ணியமும் கௌரவமும் கிடைத்தது. யார் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லையோ அவருக்கு இழிவும் அவமானமும் கிடைத்தது மட்டுமல்லாது முஸ்லிம்களுக்கு வரி செலுத்துபவராகவும் இருந்தார்.