عَن الحَسَنِ قال: حَدَّثنا جُنْدَبُ بْنُ عَبْدِ اللَّهِ رضي الله عنه، فِي هَذَا المَسْجِدِ، وَمَا نَسِينَا مُنْذُ حَدَّثَنَا، وَمَا نَخْشَى أَنْ يَكُونَ جُنْدُبٌ كَذَبَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلم:
«كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ بِهِ جُرْحٌ، فَجَزِعَ، فَأَخَذَ سِكِّينًا فَحَزَّ بِهَا يَدَهُ، فَمَا رَقَأَ الدَّمُ حَتَّى مَاتَ، قَالَ اللَّهُ تَعَالَى: بَادَرَنِي عَبْدِي بِنَفْسِهِ، حَرَّمْتُ عَلَيْهِ الجَنَّةَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 3463]
المزيــد ...
ஹஸன் அல்பஸரீ அவர்கள் கூறுகின்றார்கள் : ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அவர்கள் இந்தப் பள்ளிவாசலில் எமக்கு அறிவித்தார்கள். அவர்கள் அறிவித்ததில் இருந்து இன்னும் நாம் மறக்கவே இல்லை. ஜுன்துப் (ரலி) அவர்கள் நபியவர்கள் மீது இட்டுக்கட்டியிருப்பார் என்று நாம் பயப்படவும் மாட்டோம். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :
உங்களுக்கு முன்னிருந்தவர்களில் ஒரு மனிதர் இருந்தார். அவரிடம் ஒரு காயம் காணப்பட்டது. அவர் பொறுக்கமுடியாது, ஒரு கத்தியை எடுத்து, தனது கையை வெட்டிவிடவே, இரத்தம் பெருக் கெடுத்தோடி அவர் மரணித்துவிட்டார். அப்போது அல்லாஹ், 'என்னுடைய அடியான் என்னிடம் அவசரப்பட்டு வந்துவிட்டான். அவன் மீது நான் சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றேன்.' என்று கூறினான்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 3463]
இங்கு நபியவர்கள், எமக்கு முன்னர் வாழ்ந்த ஒரு சமுதாயத்தில் இருந்த ஒரு மனிதருக்கு ஒரு காயம் ஏற்பட்டபோது, அதன் வலியைப் பொறுக்க முடியாது, ஒரு கத்தியை எடுத்து, தன் கையை வெட்டி, மரணத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதாவது, இரத்தம் வழிந்தோடி, அவர் மரணித்து விட்டார் எனவும், அப்போது அல்லாஹ், 'என்னுடைய அடியான் என்னிடம் அவசரப்பட்டு வந்துவிட்டான். அவன் மீது நான் சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றேன்.' என்றும் கூறியதாக அறிவிக்கின்றார்கள்.