عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ رضي الله عنهما عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«يُنَادِي مُنَادٍ: إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلَا تَسْقَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلَا تَمُوتُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلَا تَهْرَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا» فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ: {وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ} [الأعراف: 43].
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2837]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஸஈத் (ரலி) மற்றும் அபூ ஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள்:
ஓர் அழைப்பாளி (மறுமையில்) அழைத்து இவ்வாறு கூறுவார் : நீங்கள் ஒரு போதும் நோய்வாய்ப்படாமல் ஆரோக்கியமாக இருக்கலாம். நீங்கள் ஒரு போதும் மரணிக்காமல் உயிருடனே இருக்கலாம். நீங்கள் ஒருபோதும் முதுமையை அடையாமல் வாலிபத்திலேயே இருக்கலாம். ஒரு போதும் சிரமப்படாமல் இன்பத்திலேயே இருக்கலாம். அதைத் தான் இவ்வசனம் கூறுகின்றது : "நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்."(ஸூரத்துல் அஃராஃப் : 43)
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2837]
இங்கு நபியவர்கள், சுவனவாதிகள் சுவனத்தின் இன்பத்தில் இருந்துகொண்டிருக்கும் போது, ஒரு அழைப்பாளி அவர்களை அழைத்து இவ்வாறு கூறுவார் எனக் கூறுகின்றார்கள் : நீங்கள் இங்கு எந்த சிறிய நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக நிரந்தரமாக வாழலாம். நீங்கள், சிறிய மரணமாகிய, உறக்கம் கூட இல்லாமல் மரணமற்ற நிரந்தர வாழ்க்கை வாழலாம். நீங்கள் வயோதிபத்தை அடையாமல் நிரந்தரமாக வாலிபத்திலேயே இருக்கலாம். நீங்கள் கவலையும், சிரமமும் இல்லாமல் இன்பமாகவே வாழலாம். அதைத் தான் இவ்வசனம் கூறுகின்றது : "நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்."(ஸூரத்துல் அஃராஃப் : 43)