عَنْ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ الْأَنْصَارِيِّ رضي الله عنه عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«ضَرَبَ اللهُ مَثَلًا صِرَاطًا مُسْتَقِيمًا، وَعَلَى جَنْبَتَيْ الصِّرَاطِ سُورَانِ، فِيهِمَا أَبْوَابٌ مُفَتَّحَةٌ، وَعَلَى الْأَبْوَابِ سُتُورٌ مُرْخَاةٌ، وَعَلَى بَابِ الصِّرَاطِ دَاعٍ يَقُولُ: أَيُّهَا النَّاسُ، ادْخُلُوا الصِّرَاطَ جَمِيعًا، وَلَا تَتَعَرَّجُوا، وَدَاعٍ يَدْعُو مِنْ فَوْقِ الصِّرَاطِ، فَإِذَا أَرَادَ يَفْتَحُ شَيْئًا مِنْ تِلْكَ الْأَبْوَابِ، قَالَ: وَيْحَكَ لَا تَفْتَحْهُ، فَإِنَّكَ إِنْ تَفْتَحْهُ تَلِجْهُ، وَالصِّرَاطُ الْإِسْلَامُ، وَالسُّورَانِ: حُدُودُ اللهِ، وَالْأَبْوَابُ الْمُفَتَّحَةُ: مَحَارِمُ اللهِ، وَذَلِكَ الدَّاعِي عَلَى رَأْسِ الصِّرَاطِ: كِتَابُ اللهِ، وَالدَّاعِي مِنِ فَوْقَ الصِّرَاطِ: وَاعِظُ اللهِ فِي قَلْبِ كُلِّ مُسْلِمٍ».
[صحيح] - [رواه الترمذي وأحمد] - [مسند أحمد: 17634]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக,அன்-நவ்வாஸ் இப்னு ஸிம்ஆன் அல்-அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்;:
738
'அல்லாஹ் நேரான பாதைக்கு ஒரு உதாரணத்தை- உவமையைக் கூறுகிறான்;: பாதையின் இரு ஓரங்களில் திறந்த வாயில்களுடன்; கூடிய இருசுவர்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலுக்கும்; ஒரு திரைசீலை உள்ளது.ஒரு அழைப்பாளர் அந்தப்பாதையின் வாயிலில் நின்று கொண்டு அனைவரும் நேரான இப்பாதையினுள் நுழைந்து நேராக செல்லுங்கள் என கூறுவார் இன்னொரு அழைப்பார் அப்பாதையின் மேலே இருந்து அவர்களில் ஒருவர் அந்த மதிலில் காணப்படும் கதவுகளை திறப்பதற்கு எத்தனித்தால் உமக்கு என்ன நேர்ந்து விட்டது ! இந்தக் கதவுகளை திறக்க வேண்டாம். அவ்வாறு திறந்தால் நீங்கள் அதற்குள் நுழைந்துவிடுவீர்கள் என அவர்களிடம் கூறுவார். இங்கு அஸ்ஸிராத் -நேரான பாதை என்பது இஸ்லாத்தைக் குறிக்கும.; இரு மதில்கள் -சுவர்கள் என்பது அல்லாஹ்வின் சட்ட வரம்புகளையும்,திறந்த கதவுகள் என்பது அல்லாஹ்வால் தடைசெய்யப்பட்ட விடயங்களையும்,பாதையின் ஆரம்பத்தில் இருந்த அழைப்பாளர் என்பது அல்லாஹ்வின் வேதத்தையும், பாதையின் மேலே இருந்த அழைப்பாளர் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இருக்கும் அல்லாஹ்வின் உபதேசியையும் குறிக்கும்.'
[ஸஹீஹானது-சரியானது] - - [مسند أحمد - 17634]
'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் இஸ்லாத்திற்கு நீண்ட வலைவில்லாத நேரான பாதையொன்றை - உவமையாகக் குறிப்பிடுவதை இந்த ஹதீஸ் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள். பாதையின் இரு ஓரங்களும்; இரு சுவர்களால்,மதில்களால் மூடப்பட்டுள்ளது. அது அல்லாஹ்வின் வரம்புகளை,வரைமுறைகளைக் காட்டும்.அந்த இரு மதில்களிலும் திறந்த பல வாயில்கள் காணப்படும் அவைகள் அல்லாஹ் தடுத்த விடயங்களாகும். அந்த வாயில்கள் யாவும் திரைசீலைகளால் மூடப்பட்டிருக்கும் அப்பாதையில் செல்வோருக்கு வெளியே தெரியமாட்டாது? குறிப்பிட்ட அந்தப்பாதையின் வாயிலின் ஆரம்பாத்தில் நின்று கொண்டு ஒருவர் வழிகாட்டுவார். அவர்கள் அப்பாதையில் செல்லவிருப்போர் அனைவருக்கும்; அங்கும் இங்கும் வலைந்து செல்லாது இப்பாதையில் நேராக செல்லுங்கள் எனக் கூறுவார்.இங்கு குறிப்பிடப்பட்ட அழைப்பாளர் என்பது அல்லாஹ்வின் வேதத்தைக்கு குறிக்கும். இன்னொருவர் பாதைக்கு மேலே இருப்பார், அவர் பாதையில் செல்பவர் வாயிலில் உள்ள திறைச்சீலையை சிறிது அகற்றி பார்க்க எத்தனிப்பார் அப்போது அவர் அவர்களை கண்டிப்பார்; . அவர் அவர்களிடம் உங்களுக்கு என்ன நேர்ந்தது அதனைத் திறக்க வேண்டாம் திறந்தால் அதனுள் நுழைவதை ஒரு போதும் உங்களால் தடுத்துக்கொள்ளவே முடியாது என்று கூறுவார். இரண்டாவது அழைப்பாளர் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தில் இருந்து வழிகாட்டும் அல்லாஹ்வின் உபதேசியாகும்.