عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنهما أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا تَعَلَّمُوا الْعِلْمَ لِتُبَاهُوا بِهِ الْعُلَمَاءَ، وَلَا لِتُمَارُوا بِهِ السُّفَهَاءَ، وَلَا تَخَيَّرُوا بِهِ الْمَجَالِسَ، فَمَنْ فَعَلَ ذَلِكَ، فَالنَّارُ النَّارُ».
[صحيح] - [رواه ابن ماجه] - [سنن ابن ماجه: 254]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'அறிஞர்களிடம் பெருமையடித்துக்; கொள்வதற்காகவோ,முட்டாள்களுடன் தர்க்கம் புரிவதற்காகவோ,சபைகளில் (ஏனையோரைவிட) முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவோ,அறிவைத் தேடாதீர்கள்.யார் இவ்வாறு நடந்து கொள்கிறோ அவருக்கு நரகமே கிடைக்கும் ';
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்] - [سنن ابن ماجه - 254]
அறிஞர்களிடம் தானும் உங்களைப்போன்ற அறிஞர் என்று பெருமையடிப்பதை நோக்காகக் கொண்டு கல்வியை தேடுவதையும், சாமான்ய மனிதர்களுடனும்,அறிவீனர்களுடனும் தர்க்கம் செய்யவதற்கும், சபைகளில் ஏனையோரை தனக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் கல்வி கற்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள். இவ்வாறு செய்பவர் அவரின் முகஸ்துதிக்காகவும், அல்லாஹ்வுக்காக என்ற தூய்மையான எண்ணமின்றியும் கல்விகற்றதற்காகவும் நரகத்துக்குரியவராக மாறிவிடுகிறார்.