+ -

عن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «ألا إن الدنيا مَلعُونة، مَلعُونٌ ما فيها، إلا ذكرَ الله تعالى، وما وَالاهُ، وعالما ومُتَعَلِّمَا».
[حسن] - [رواه الترمذي وابن ماجه]
المزيــد ...

"அறிந்து கொள்ளுங்கள் இவ்வுலகமும் அதில் இருப்பவைகளும் சபிக்கப்பட்டவைகளாகும் ஆனால் அல்லாஹ்வின் தியானத்தையும் ,அதனுடன் தொடர்புடைய விடயங்களையும்,மற்றும் அங்குள்ள அறிஞர்களையும் அறிவைத் தேடுகிறவர்களையும் தவிர" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஹஸனானது-சிறந்தது] - [இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார் - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

விளக்கம்

மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் அவன் அல்லாஹ்வை வணங்க வேண்டும்,அவனின் ஷரீஆவை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே.இதை விட்டும் உலகிலுள்ள அழங்காரங்கள் யாவும் அவனை தூரமாக்குகின்றன,எனவே அவை யாவும் அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்கான வைகளாகவும்,அவனிடம் இழிவானவைகளாகவும் கருதப்படுகின்றன ஆனால் மனிதன்அல்லாஹ்வின் தியானத்தலும்,மற்றும் அது போன்று ஏனைய வழிபாடுகளிலும் ஈடுபட்டிருப்பதுவும்,மேலும் அவன் அறிவைக் கற்பதுவும் அதனைக்கற்றுக் கொடுப்பதுவும் அவன் சிருஷ்ட்டிக்கப்பட்டதன் நோக்கத்தைச் சார்ந்தது என்றபடியால் இவை அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்காக மாட்டாதது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா ஸ்வாஹிலி Осомӣ الهولندية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு