+ -

عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعاً: «احْتَجَّتِ الجنَّة والنَّار، فقالتِ النَّار: فيَّ الجبَّارون والمُتَكَبِّرُون. وقالتِ الجنَّة: فيَّ ضُعَفَاء الناسِ ومساكِينُهُم، فقضى الله بَيْنَهُمَا: إِنك الجنَّة رحْمَتي أَرحم بك من أشاء، وإِنك النَّار عذابي أُعذب بك من أشاء، ولِكِلَيْكُمَا عليَّ مِلْؤُهَا».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

சுவர்க்கமும் நரகமும் விவாதித்துக் கொண்டன.அவ்வமயம் என்னிடம் அடக்கி ஆளுவோரும்,கர்வம் கொண்டவர்களும் நரகம்இருக்கின்றனர் என்று கூறியது.மேலும் சுவர்க்கம், என்னிடம் பலவீனமான மனிதர்களும்,ஏழை மக்களும் இருக்கின்றனர்,என்று கூறியது.அப்பொழுது அல்லாஹ் அவை இரண்டுக்கும் இடையே தீர்ப்பு வழங்கினான். அவ்வமயம் "சுவர்க்கமே!நீ என்னுடைய அருளாக இருக்கின்றாய்.உன்னைக் கொண்டு நான் நாடியவர்கள் மீது அருள்பாளிப்பேன்.என்றும்,நரகமே நீ எனது தண்டனையாக இருக்கின்றாய்.உன்னைக் கொண்டு நான் விரும்பிய வர்களைத் தண்டிப்பேன்.உங்கள் இருவரின் தலங்களையும் நிரம்பச் செய்வது என் பொறுப்பாகும்"என்றும் அல்லாஹ் கூறினான்,என.ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என்று அபூ ஸஈத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

விளக்கம்

ஹதீஸ் விளக்கம்:சுவர்க்கமும் நரகமும் பரஸ்பரம் விவாதித்துக் கொண்டன.அச்சமயம் அவை இரண்டும் தமது ஆதாரங்களை முன் வைத்தன.என்று இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது.மறைவான இந்த விடயங்கள் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவைகளாக இருந்தாலும்,அதன் மீது ஈமான் கொள்வது நமது கடமை.எனவே நரகம் சுவர்க்கத்தை எதிர்த்து வாதிடும் போது நரகில் அடக்கி ஆளுகின்றவர்களும்,கர்வம் கொண்டவர்களும் இருப்பதாகக் கூறியது.அடக்கி ஆளுகின்றவர்கள் என்பது கொடூரமானவர்களையும்,முரடர்களையும் குறிக்கும்.கர்வம் கொண்டவர்கள் என்பது அதிகாரம் கொண்டவர்களைக் குறிக்கும் இவர்கள்தான் மனிதர்களை இழிவாகப் பார்க்கின்றவர்கள்,உண்மையை மறுக்கின்றவர்கள்.மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் பெருமையைப் பற்றிக் குறிப்பிடும் போது "பெருமை என்றால் உண்மையை மறுத்தலாகும்,மனிதர்களை இழிவாகப் பார்த்தலாகும்"என்றார்கள்.எனவே அடக்கி ஆளுகின்றவர்களும்,கர்வம் கொண்டவர்களுமே பெரும்பாலும் நரகம் செல்கின்றவர்களாக இருந்த போதிலும் சில வேளை மனிதர்களுடன் நலினமாக நடந்து கொள்ளும்,நற்பண்புகள் கொண்டவர்களும் நரகம் செல்வார்கள்.ஏனெனில் உண்மையை ஏற்றுக் கொள்ளும் விடயத்தில் அவர்கள் அடக்கி ஆளுகின்றவர்களினதும், கர்வம் கொண்டவர்களினதும் பண்பைக் கொண்டவர்களாக இருப்பதுவே அவர்கள் நரகம் செல்லக் காரணமாக அமைகின்றன. எனவே அதனைவிட்டும் யாவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.எனவே மனிதர்களின் விடயத்தில் அவர்கள் நலினமானவர்களாக நற்பண்புகளை உடையவர்களாக இருந்த போதிலும், பெரும்பாலான அகங்காரம் கொண்டவர்கள் மற்றும் அடக்கி ஆளுகின்றவர்கள் போன்று அவர்களும் கர்வம் கொண்டு அதிகாரத் தோரணையில் உண்மையை ஏற்க மறுத்ததன் காரணமாக அவர்களின் அந்த நற்பண்புகள் மறுமையில் அவர்களுக்குப் பயன் அளிக்காது.ஆகையால் அவர்களும் அடக்கியாளுகின்றவர்களின்,கர்வம் கொண்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.மேலும் சுவர்க்கமோ தன்னிடம் பலவீனமான மக்களும் ஏழை மக்களும் இருப்பதாகக் கூறியது.ஏனெனில் பெரும்பாலும் அவர்கள்தான் உண்மைக்கு வளைந்து கொடுக்கின்றவர்களாகவும் அதற்கு வழிப்பட்டு நடக்கின்றவர்களாகவும் இருக்கின்றனர்.மேலும் கர்வம் கொண்டவர்களும் அடக்கி ஆளுகின்றவர்ளும் பெரும்பாலும் உண்மையை ஏற்றுக் கொள்வதில்லை,அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதுமில்லை.எனவே இவையிரண்டுக்கும் இடையே அல்லாஹ் தீர்ப்பு வழங்கினான்.அவ்வமயம் அவன் சுவர்க்த்திடம் "சுவர்க்கமே!நீ என்னுடைய அருளாக இருக்கின்றாய்.உன்னைக் கொண்டு நான் நாடியவர்கள் மீது அருள்பாளிப்பேன்.என்று கூறினான்.மேலும்,நரகத்திடம் நரகமே நீ எனது தண்டனையாக இருக்கின்றாய்.உன்னைக் கொண்டு நான் விரும்பியவர்களைத் தண்டிப்பேன்.என்றும் உங்கள் இருவரின் தலங்களையும் நிரம்பச் செய்திடுவது என் பொறுப்பாகும்"என்றும் கூறினான்.இவ்வாறு சுவர்க்த்தையும்,நரகையும் நிரப்பிவிடும் பொறுப்பை அல்வாஹ் ஏற்றுக் கொண்டான்.மேலும் அல்லாஹ்வின் கோபத்தை விடவும் அவனுடைய அருள் விசாலமானது. எனவே மறுமை நாளில் நரக வாசிகள் நரகில் தள்ளப்பட்ட பின்னர்,நரகம் இன்னும் இருக்கின்றார்களா?அவர்களை எனக்குத் தாருங்கள்,எனக்குத் தாருங்கள் என்று கூறும். அப்பொழுது அல்லாஹ் தன் பாதத்தை அதன் மீது வைப்பான்.அவ்வமயம் அல்லாஹ்வின் பாதத்தின் தாக்கத்தகின் காரணமாக நரகம் ஒன்றோடொன்று இணைந்து நெருக்கமாகிவிடும்.அப்பொழுது அது போதும் போதும் என்று கூறும்.அதன் போது நரகம் நிரம்பி விடும்.மேலும் சுவர்க்கமோ மிக விசாலமானது. அதன் அகலம் வானம் பூமியின் விசாலம் கொண்டதாகும்.சுவர்க்க வாசிகள் சுவர்க்கதில் பிரவேசித்த பின்னரும் அதில் இன்னும் அதிகம் இடமிருக்கும்.ஆகையால் அதனை நிரப்பும் பொருப்பினை அல்லாஹ் ஏற்றுக் கொண்டிருந்தபடியால் அல்லாஹ் இன்னும் பல சமூகத்தினர்களை உண்டாக்கி அவர்களையும் சுவர்க்கதில் பிரவேசிக்கச் செய்திடுவான்.இவ்வாறு சுவர்க்கம் நிரம்பி விடும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு