عن عبد الله بن عمرو رضي الله عنهما قال: أقبَلَ رجل إلى نبي الله صلى الله عليه وسلم فقال: أُبَايِعُكَ على الهجرة والجهاد أَبْتَغِي الأجر من الله تعالى قال: «فَهَل لَكَ من وَالِدَيك أحد حيٌّ؟» قال: نعم، بل كلاهما، قال: «فتبتغي الأجر من الله تعالى؟» قال: نعم، قال: «فَارْجِع إلى وَالِدَيك، فَأَحْسِن صُحْبَتَهُمَا». وفي رواية لهما: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فاستأذنه في الجهاد، فقال: «أَحَيٌّ والداك؟»، قال: نعم، قال: «فَفِيهِمَا فجاهد».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

ஒரு மனிதர் ரஸுல் (ஸல்) அவர்களிடம் வந்தார்.அவர்"நான் ஹிஜ்ரத் செல்லவும்,ஜிஹாத் செய்யவும் உங்களிடம் பைஅத் செய்து கொள்கின்றேன்.ஏனெனில் நான் அல்லாஹ்விடம் அதன் கூலியைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்"என்று கூறினார்.அதற்கு நபியவர்கள் "உமது பெற்றோரில் ஒருவரேனும் உயிருடன் இருக்கின்றனரா?" என்றார்கள்.அதற்கு அவர் "ஆம் இருவரும் இருக்கின்றனர்"என்றார்.அதற்கு நபியவர்கள்"நீங்கள் அல்லாஹ்விடம் அதன் கூலியை எதிர் பார்க்கின்றீர்களா?"என்றார்கள்.அதற்கு அவர்"ஆம்" என்றார்.அப்பொழுது நபியவர்கள் "அப்படியாயின் நீங்கள் உங்கள் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவர்களுடன் சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்"என்று கூறினார்கள்,என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள்அறிவிக்கின்றார்.அன்னாரின் இன்னொரு அறிவிப்பில்"ஒரு மனிதர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து ஜிஹாதில் செல்வதற்கு அனுமதி கோரினார்.அப்பொழுது நபியவர்கள் "உங்களின் பெற்றோர் இருவரும் உயிர் வாழ்கின்றானரா?"என்றார்கள்.அதற்கு அவர் "ஆம்" என்றார்.அதற்கு நபியவர்கள் "அப்படியாயின் அவர்கள் இருவரின் விடயத்தில் ஜிஹாது செய்யுங்கள்"என்றார்கள்.என குறிப்பிடப்பட்டுள்ளது
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஒரு மனிதன் தனது பெற்றோரை தனியாக விட்டு ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாதில் ஈடுபடவும்,ஹிஜ்ரத் செல்லவும் தனக்கு விருப்பமாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.மேலும் அபூதாவூதின் அறிவிப்பில் அப்பொழுதுஅவர்கள் இருவரும் அவரின் அழிவை அஞ்சி அழுது கொண்டிருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நபியவர்கள் அந்த மனிதனிடம் "உங்களின் பெற்றோரில் எவரேனும் உயிருடன் இருக்கின்றனரா?" என்று வினவினார்கள். அதற்கு அவர் "ஆம் அவர்கள் இருவரும் இருக்கின்றனர்"என்றார்.அதற்கு நபியவர்கள்"நீங்கள் அல்லாஹ்விடம் அதன் கூலியைப் பெற விரும்புகிறீர்களா?"என்றார்கள். அதற்கு அவர்"ஆம்"என்றார்.அதற்கு நபியவர்கள் "அப்படியாயின் நீங்கள் உங்களின் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவர்களுடன் சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்" என்றார்கள்.அபூதாவூதின் ஒரு அறிப்பில்,"நீங்கள் அவர்கள் இருவரிடம் திரும்பிச் சென்று,அவர்கள் இருவரையும் நீங்கள் எப்படி அழ வைத்தீர்களோ அப்படியே அவர்களை சிரிக்க வையுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே அந்த மனிதனின் விடயத்தில் எது மிகவும் மேலானதாகவும் மிகக் கடமையாகவும் இருந்ததோ அதன் பக்கம் அவரை ரஸூல் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.அதுதான் அவர் தன் பெற்றோரிடம் சென்று அவர்களுடனிருந்து அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வதாகும்.இப்படி அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வதும்,அவர்களைத் திருப்திப் படுத்துவதும்,அவர்களுக்கு வழிப்பட்டு நடப்பதும் ஆத்மாவுடன் ஜிஹாது செய்யும் செயலாகும் இதனையே புஹாரி, முஸ்லிமின் அறிப்பில் குறிப்பிட்டுள்ள"நீங்கள் அவர்கள் இருவரின் விடயத்தில் ஜிஹாத் செய்யுங்கள்" எனும் வாசகம் எடுத்துரைக்கின்றது.மேலும் அல்லாஹ்வின்பாதையில் ஜிஹாது செய்வதைவிட பெற்றோருக்கு நன்மை செய்தல்,அவர்களுக்குக் கட்டுப்டுதல்.அவர்களுக்கு உதவி,உபாரம் செய்தல் மிகச் சிறந்த அமல்கள் என இன்னொரு ஹதீஸில் ரஸூல் (ஸல்) அவர்கள் தௌிவாகக்குறிப்பிட்டுள்ளார்கள்.இது போன்று இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது."ஒரு மனிதன் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களிடம்"அமல்களில் சிறந்தது எது?"எனக்கேட்டார்.அதற்கு நபியவர்கள் "தொழுகை" என்றார்கள்.அதற்கு அந்த மனிதன்"அதன் பின்னர் எது"?என்றார்.அதற்கு நபியவர்கள் "ஜிஹாத்-அறப்போர்"என்றார்கள்.அதற்கு அந்த மனிதன் எனது இரண்டு பெற்றோர்களும் இருக்கின்றனரே" என்றார்.அப்பொழுது நபியவர்கள்"நீங்கள் உங்களின் பெற்றோருக்கு நன்மை செய்தல் சிறந்தது"என்றார்கள்.என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.இந்த ஹதீஸை இப்னு ஹிப்பான் அவர்கள் பகுப்பாய்வு செய்துள்ளார்கள்.மேலும் ஜிஹாத்-அறப்போரானது பர்ழு ஐன் என்ற கட்டத்தை அடடையாத வரை பெற்றோருக்கு நன்மை செய்யும் காரியத்தில் ஈடுபாடு கொள்வதானது,ஜிஹாதை விடவும் சிறந்த காரியமாக விளங்கும் என்பதை இந்த ஹதீஸ் உறுதி செய்கின்றது.எனினும் 'ஜிஹாத்' பர்ழுஐன் என்ற கட்டத்தை அடைந்து விட்டாலோ பெற்றோருக்கு கட்டுப்படுவதைப் பார்க்கிலும் ஜிஹாதுக்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும்

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி குர்தி போர்த்துகீசியம் ஸ்வாஹிலி
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு